Home » கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் திருவிழா கிராமங்கள் தோறும் நடத்திட உரிய அனுமதி பெற்றுத்தர வலியுறுத்தி தமிழர் பாரம்பரிய மஞ்சுவிரட்டு நலச்சங்கத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் டி.மதியழகன் அவர்களிடம் கோரிக்கைமனு அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் திருவிழா கிராமங்கள் தோறும் நடத்திட உரிய அனுமதி பெற்றுத்தர வலியுறுத்தி தமிழர் பாரம்பரிய மஞ்சுவிரட்டு நலச்சங்கத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் டி.மதியழகன் அவர்களிடம் கோரிக்கைமனு அளிக்கப்பட்டது.

by Babukanth V
1 comment

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் திருவிழா கிராமங்கள் தோறும் நடத்திட உரிய அனுமதி பெற்றுத்தர வலியுறுத்தி தமிழர் பாரம்பரிய மஞ்சுவிரட்டு நலச்சங்கத்தின் சார்ப்பில் சட்டமன்ற உறுப்பினர் மதியழகனிடம் கோரிக்கை
மனு அளிக்கப்பட்டது.
………………………………………………..

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுத் தோறும் தமிழர்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான பெங்கல் திருநாளினை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரியத்தை வழியுறுத்தும் வகையில் கிராமங்கள் தோறும் எருது விடுதல், மஞ்சுவிரட்டுதல், ஜல்லிகட்டு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் கிருஷ்ணகிரி மாவடத்தில் ஒரு சில கிராமங்களில் எருதுவிடும் விழா நடத்தப்பட்டு வருகிறது, இந்த எருதுவிடும் விழா நடத்திட புதியதாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள
கொத்தப் பேட்டா, காந்தி நகர், கொட்டாயூர்,நாகனப்பள்ளி, காட்டாகரம், ஓட்டூர், மகராஜா கடை உள்ளிட்ட கிராமங்களில் எருதுவிடும் திருவிழா நடத்த உரிய அனுமதி கேட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து அதற்கான கோரிக்கை மனுவினை கொடுத்த்து
உள்ளனர்.
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழர்களின் எருதுவிடும் திருவிழா நடைப்பெற உள்ள நிலையில் இதுவரை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுவரை
எந்த ஒரு நடவடிக்கையும்
எடுக்காததால் கிராம மக்களிடையே பெரும் அதீர்ப்த்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதிதநிலையில் கிராமங்களில் எருதுவிடும் திருவிழாவினை அரசாணைப்படி நடந்திட உரிய அனுமதி பெற்றுத்தர வலியுறுத்தி தமிழர் பாரம்பரிய மஞ்சுவிரட்டும் நலச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் செல்வம்
தலமையில்
பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் அவர்களை
சந்தித்து 20-க்கு மேற்பட்ட கிராம மக்கள் எருது விடுவிழா நடத்திட உரிய அனுமதிப்
பெற்றுத்தர வழியுறுத்தி கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.
பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்
கொண்ட சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் இந்த ஆண்டு முதல் எருதுவிடும் திருவிழா உரிய அனுமதியோடு நடத்த உரிய அனுமதி வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
அப்போது மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்டப் பெருளாளர் அண்ணாமலை, கிருஷ்ணமுர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஏராளமானவர்கள் உடன் இருந்தனர்கள்.

You may also like

1 comment

Manjunathan October 11, 2021 - 8:23 PM

Super

Reply

Leave a Comment

error: Content is protected !!