வேப்பனஹள்ளி கிழக்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகைத்தரும் டி.டி.வி.தினகரன் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
……………………………………………
கிருஷ்ணகிரி மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட வேப்பனஹள்ளி கிழங்கு ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் ஊராட்சி செயலாளர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது.
கிழக்கு ஒன்றிய செயலாளர் திம்மப்பா தலைமையில் நடைப்பெற்ற இந்தக் கூட்டத்திற்கு
மேற்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, அவைத்தலைவர் சந்தோஷ்குமார், ஒன்றிய பெருலாளர் அம்சகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்தக் கூட்டத்தில் கழகப் பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளிக்கு வருகைத்தர உள்ளது குறித்து நிர்வாகிகள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து டி.டி.வி தினகரன் அவர்களுக்கு குந்தாரப்பள்ளியில் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட வேண்டும், மாற்று கட்சினர்கள் திகைக்கின்ற வகையில் மிகப்பெரிய அளவில் மக்களின் கூட்டத்தினை கூட்டவேண்டும், மாற்று கட்சிகளில் இருந்து விலகி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணையும் புதிய உறுப்பினர்களை கெளரவிக்கப்பட வேண்டும், வருகின்ற சட்டமன்றம், மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் வேப்பனஹள்ளி பகுதியை சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிர்வாகிகளின் கூட்டத்தின்போது மாற்று கட்சியில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிய செயலாளர் திம்மப்பா தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கிழகத்தில் இணைந்தனர்.
இந்தக் கூட்டத்தின்போது ஒன்றிய மகளிர் அணி துணைச் செயலாளர்கள் லட்சுமிபாய், சிவனாம்மாள், ஒன்றிய இணைச்செயலாளர்கள் சூடப்பா, சங்கர்,
முகமது ரியாஸ், நன்றிய இளஞ்சர் பாசறை முனிராஜ், உள்ளிட்ட ஒன்றிய நகர, ஊராட்சி செயலாளர்களும் கலந்துக்கொண்டனர்கள்.