Home » கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த என்.தட்டக்கல் கிராமத்தில்மயிலை விழுங்கிய மலைப்பாம்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த என்.தட்டக்கல் கிராமத்தில்மயிலை விழுங்கிய மலைப்பாம்பு

by Babukanth V
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த என்.தட்டக்கல் கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் தளபதி, இன்று காலை அவரது மாதோப்பில் சுற்று பார்த்துக்கொண்டிருந்த போது, மலைப்பாம்பு ஒன்று மயிலை பிடித்து விழுங்கிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, அக்கம்பக்கத்தினரை அழைத்தார். அனைவரும் வந்து அவர்களது செல்போனில் படம் பிடித்தனர். இதனை உணர்ந்த மலைப்பாம்பு விழுங்கிய மயிலை உமிழ்ந்துவிட்டு அருகே இருந்த புதருக்குள் மறைந்தது. இதையடுத்து மயிலை சோதித்து பார்த்ததில் அவை இறந்து விட்டதை அறிந்து கிருஷ்ணகிரி வன அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் அங்கு வந்த வன அதிகாரி மயிலை பரிசோதித்து வனப்பகுதிக்குள் உடலை புதைத்தனர். புதரில் மறைந்திருந்த மலைப்பாம்பை பிடித்து என்.தட்டக்கல் மலைப்பகுதிக்குள் விடுவித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மயில்களின் பெருக்கம் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!