Home » போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு நாட்டுக்கோழி வரத்து அதிகரிப்பு – விலை குறைவாக போனதால் விவசாயிகள் ஏமாற்றம்

போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு நாட்டுக்கோழி வரத்து அதிகரிப்பு – விலை குறைவாக போனதால் விவசாயிகள் ஏமாற்றம்

by Babukanth V
0 comment

போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு நாட்டுக்கோழி வரத்து அதிகரிப்பு – விலை குறைவாக போனதால் விவசாயிகள் ஏமாற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிற்றுகிழமை தோரும் கூடுவது வழக்கம். போச்சம்பள்ளி சுற்று வட்டார கிராமங்களில் புரட்டாசி மாதம் முழுவதும் அசைவம் தவிர்த்து, புரட்டாசி மாதத்தில் இருக்கின்ற 5 சனிக்கிழமைகளிலும் விரதம் இருந்து பெருமாளுக்கு வழிப்படுவது வழக்கம். இதன் காரணமாக போச்சம்பள்ளி வாரச்சந்தையில் புரட்டாசி மாதம் முழுவதும் ஆடு மற்றும் கோழிகள் விற்பனை வெகுவாக பாதிக்கப்படும்.

தற்போது புரட்டாசி 4 சனிக்கிழமை முடிவடைந்த நிலையில் இன்ற் வாரச்சந்தைக்கு விவசாயிகள் நாட்டுக்கோழிகளை அதிக அளவு எடுத்து வந்திருந்தனர். பொது மக்கள் நாட்டுக்கோழிகளை வாங்கி அசைவம் சாப்பிடுவார்கள் என எண்ணிய விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. 4 புரட்டாசி சனிக்கிழமை முடிவடைந்த நிலையில் இன்னும் 5வது சனிக்கிழமை முடிவடையாததால் பெரும்பாலான பொது மக்கள் அசைவம் சாப்பிடாத காரணத்தால் நாட்டுக்கோழிகளை வாங்க பொது மக்கள் இல்லாத காரணத்தால் விலை குறைவாக போனதால் விவசாயிகள் பெருத்த ஏமாற்றமடைந்தனர். சராசரியாக உயிருடன் கிலோ ரூ.320க்கு விற்கப்படும் நிலையில் இன்று உயிருடன் அதிகபட்சமாக கிலோ ரூ.280க்கு விலை போனது. இதனால் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த கோழிகளை விற்காமல் வீடுகளுக்கு மீண்டும் எடுத்து சென்றனர். அடுத்த வாரம் புரட்டாசி சனிக்கழமை முடிவடைவதால் நல்ல விலைக்கு விற்க முடியும் என்கிற நம்பிக்கையில் சென்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!