Home » சாமல்பள்ளம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க பள்ளி மாணவர்களுக்காக மேம்பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகத்ததிடம் கே.பி.முனுசாமி எம்எல்ஏ வலியுறுத்தல்

சாமல்பள்ளம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க பள்ளி மாணவர்களுக்காக மேம்பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகத்ததிடம் கே.பி.முனுசாமி எம்எல்ஏ வலியுறுத்தல்

by Babukanth V
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் இமிடிநாயக்கன் பள்ளியில் அரசு ஆண்கள் & மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி அன்று பிரேம்குமார் என்கிற மாணவன் சாலையை கடக்கும் பொழுது வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். வேதனையில் இருந்த மாணவ மாணவிகள் இன்று தேசிய நெடுஞ்சாலை சாமல்பள்ளம் என்னுமிடத்தில் சாலைமறியல் செய்தனர். தகவலறிந்த சூளகிரி காவல்துறையினர், வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கேபி.முனுசாமி அவர்கள் மற்றும் எஎஸ் பி அரவிந்த் ஆகியோர் ஒன்றினைந்து மாணவ மாணவிகளுக்கு மேம்பாலம் அமைத்துத் தருகிறோம் என்று வாக்குறுதிகளை அளித்து சமாதானப் பேச்சில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் சமாதானபேச்சுவார்த்தை நடைபெற்றது. தேசிய நெடுஞ்சாலை அதிகாரி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களும் கண்டிப்பாக இந்த இடத்தில் மேம்பாலம் கட்டுவதற்கான முயற்சிகளை நாங்கள் செய்கிறோம் என்று உறுதி அளித்தார். வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கேபி. முனுசாமி எம்எல்ஏ அங்கிருந்தபடியே மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் பேசி உடனடியாக மேம்பாலம் அமைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்றகொள்ள வலியுறுத்தினார். அதனடிப்படையில் போராட்டத்திலிருந்து மாணவமணிகள் விலகி பள்ளிகளுக்குச் சென்றனர். இந்த திடீர் ஆர்ப்பாட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!