Home » கெலமங்கலம் அருகே நாகமுனீஸ்வரர் கோவில் திருவிழா

கெலமங்கலம் அருகே நாகமுனீஸ்வரர் கோவில் திருவிழா

by Babukanth V
0 comment

கெலமங்கலம் அருகே நாக முனீஸ்வர சுவாமி தேர்த்திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள ஜக்கேரி ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்ன குறுக்கை கிராமத்தில் ஸ்ரீ நாக முனீஸ்வர சுவாமி கோயில் தேர்த்திருவிழா இன்று நடந்தது. ஆண்டுதோறும் மாசி மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம் 54 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் தேர் திருவிழா இந்த ஆண்டும் அதி விமர்சியாக நடைபெற்றது அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித தீர்த்தம் தெளித்து தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தேரில் உற்சவ மூர்த்தியை அமர்த்தி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் ஒலிக்க பக்தர்கள் அனைவரும் தேரின் வடம் பிடித்து இழுத்து கோவிலை சுற்றி வலம் வந்து தேரை நிலை நிறுத்தினர். இதில் கெலமங்கலம், தேன்கனிகோட்டை ஒசூர் அனுசேnனை உள்ளிட்ட சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் கர்நாடக மாநில பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு நீர் மோர், பானகம், அன்னதானம் வழங்கினர் விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் இந்து அறநிலைதுறை அதிகாரிகள்செய்து இருந்தனர் தொடர்ந்து இரவு ரேனுகா எல்லம்மா தேவி நாடகம் நடைபெற்றது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!