Home » தர்மபுரியில் இலவச எலும்பு உறுதி பரிசோதனை மற்றும் பிசியோதெரபி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

தர்மபுரியில் இலவச எலும்பு உறுதி பரிசோதனை மற்றும் பிசியோதெரபி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது

by Babukanth V
0 comment

இன்று வேதா பிசியோதெரபி மற்றும் உடற்பயிற்சி நிலையம் சார்பாக GROUPPAL Dharmapuri Gain Chapter இணைந்து நடத்திய இலவச எலும்பு உறுதி பரிசோதனை மற்றும் பிசியோதெரபி மருத்துவ ஆலோசனைகள் இலவச முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு எலும்பு உறுதி பரிசோதனை மற்றும் அதை சரி செய்வதற்கான வழிமுறைகளை மருத்துவரிடம் கேட்டு அறிந்துகொண்டனர். இந்த நிகழ்வை தர்மபுரி நகரமன்ற தலைவர் திருமதி லக்ஷ்மி நாட்டான் மாது , நாட்டான் மாது அவர்கள் துவக்கி வைத்தார்கள்.மேலும் Dharmapuri Gain Chapter சார்பாக ஹெல்த்கேர் ரத்தப் பரிசோதனை நிலையம் ராஜா வஜிரம் , ராதாஸ்டோர்ஸ் பிரதீப்குமார் , விஜிஸ் விஜய் , சதீஸ் , பிரியா பாலமுருகன் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி உடற்பயிற்சிகளை மருத்துவர் மணிமாறன் அவர்கள் பயிற்றுவித்தார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!