Home » பாலக்கோட்டில் அரசு திருமண மண்டபங்கள் திறக்கப்படாததால் ஏழை எளிய மக்கள் தனியார் திருமணமண்டபத்திற்கு நாடி செல்லும் அவலம்- அதிகாரிகள் அலட்சியம்

பாலக்கோட்டில் அரசு திருமண மண்டபங்கள் திறக்கப்படாததால் ஏழை எளிய மக்கள் தனியார் திருமணமண்டபத்திற்கு நாடி செல்லும் அவலம்- அதிகாரிகள் அலட்சியம்

by Babukanth V
0 comment

பாலக்கோட்டில் அரசு திருமண மண்டபங்கள் திறக்கப்படாததால் ஏழை எளிய மக்கள் தனியார் திருமணமண்டபத்திற்கு நாடி செல்லும் அவலம்- அதிகாரிகள் அலட்சியம்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்தில் உள்ள 32 ஊராட்சிகளில் ஏழை எளிய மக்கள் தங்கள் வீட்டில் நடைபெறும் திருமணம், வளைகாப்பு, காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடத்த அரசு திருமண மண்டபம் கட்டி தர வேண்டுமென கோரிக்கை மனுக்கள் அளித்தனர், அதன் அடிப்படையில் எர்ரணஹள்ளி, பெலமாரனஅள்ளி, நல்லூர், பேளாரஅள்ளி, சாமனூர், அத்திமுட்லு உள்ளிட்ட ஊராட்சிகளில் சமையலறையுடன் கூடிய திருமண மண்டபம் ரூ.85 லட்சம் வீதம் 13 திருமண மண்டபகங்கள் 11 கோடியே 5 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி வளர்ச்சி மற்றும் முகமை திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவடைந்து ஒரு வருடம் கடந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவராததால் ஏழை எளிய பொதுமக்கள் திருமணம் நடத்த லட்சக்கணக்கில் செலவு செய்து
தனியார் திருமண மண்டபத்தை தேடி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் அரசு மண்டபங்களை சில சமூக விரோதிகள் கூடாரமாகவும், குடிகாரர்கள் மது அருந்தும் இடமாக மாறி வருவதாக கிராம பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அரசு திருமண மண்டபத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!