Home » கிருஷ்ணகிரியில் 28-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி வரும் 22-ம் தேதி (புதன்கிழமை) தொடங்க உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் டாக்டர் வி.ஜெயசந்திர பானு ரெட்டி இஆப அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் 28-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி வரும் 22-ம் தேதி (புதன்கிழமை) தொடங்க உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் டாக்டர் வி.ஜெயசந்திர பானு ரெட்டி இஆப அவர்கள் தெரிவித்துள்ளார்.

by Babukanth V
0 comment

கிருஷ்ணகிரியில் 28-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி வரும் 22-ம் தேதி (புதன்கிழமை) தொடங்க உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் டாக்டர் வி.ஜெயசந்திர பானு ரெட்டி இஆப அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 28-வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி வரும் 22-ம் தேதி தொடங்கி 25 நாட்களுக்கு நடைபெற உள்ளது. அமைச்சர்கள் கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்து
நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளனர். மேலும் அரசு துறைகள் சார்பாக 50 அரங்குகளும், தனியார் அங்காடிகள் 80 மற்றும் கலையரங்கம், மா – கண்காட்சி அரங்கு, பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய கேளிக்கை அரங்குகள், சிற்றுண்டி உணவகங்கள், ஆவின் பாலகம், மகளிர் சுய உதவிக்குழு தயாரிப்பு பொருட்கள் விற்பனை அங்காடிகள் என அனைத்து துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.

மேலும் மா விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைவித்த அனைத்து மாங்கனிகள் காட்சிபடுத்தப்படவுள்ளது. நாள்தோறும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், உள்ளூர் கலைஞர்களின் இன்னிசை கச்சேரி, இசைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!