Home » தருமபுரி மாவட்டம் சூடனூர் ஊராட்சியில் கல் குவாரி இயங்க மத்திய, மாநில அரசு அனுமதி வழங்கியதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தருமபுரி மாவட்டம் சூடனூர் ஊராட்சியில் கல் குவாரி இயங்க மத்திய, மாநில அரசு அனுமதி வழங்கியதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

by Babukanth V
0 comment

தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே சூடனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாலப்பன அள்ளி. தண்டேகுப்பம். எல்லப்பன் பாறை. கூலிகானூர். ஐத்தாண்டஹள்ளி ஆகிய கிராமங்கள் சுற்றியுள்ள மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்றனர். சூடனூர் கிராமம் அருகே கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல் கல்குவாரியால் சுற்றியுள்ள கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு பாதிப்பு ஏற்படுவதாகவும் இதனால் விவசாயம் செய்ய முடியாமல் நிலத்தடி நீர் 2000 அடிக்கு கீழே சென்று உள்ளதால் மக்கள் வெளியூர்களுக்கு சென்று கூலி வேலை செய்து வருகின்ற நிலை ஏற்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. கிராமங்கள் சுற்றியும் அடர்ந்த காடுகள் மற்றும் மரங்கள் இருந்தது அனைத்தும் அழிந்து விட்டது. இதனால் காடுகளில் உயிர்வாழும் விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றது. கல்குவாரியினால் ஏற்படும் வெடி சத்தம் வீடு அதிர்ச்சி அடைந்து சுவர் விரிசல் ஏற்படுகிறது முதியவர்கள் நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் வெடி சத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். கல்குவாரியினை இயங்கும் ராட்சச இயந்திரங்கள் மூலம் கனரக வாகனங்கள் ஊர் வழியாக செல்வதில் சாலை விபத்துகள் காற்று மாசு ஏற்படுகிறது என்று பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கிரானைட் கல் குவாரிக்கு அனுமதி கொடுத்த மத்திய அரசு மாநில அரசு கண்டித்து 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பகுதியில் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலக்கோடு துணை கண்காணிப்பாளர் சிந்து தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!