Home » ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மகளிர் விழிப்புணர்வு ஓவிய போட்டி! தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையகுழு உறுப்பினர் டாக்டர் மாலதி நேரில் பார்வையிட்டு வாழ்த்தினார்

ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மகளிர் விழிப்புணர்வு ஓவிய போட்டி! தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையகுழு உறுப்பினர் டாக்டர் மாலதி நேரில் பார்வையிட்டு வாழ்த்தினார்

by Babukanth V
0 comment

ஊத்தங்கரையில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய போட்டிநேற்று நடந்தது.
பெண்கள் மேம்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியப்போட்டி, பல்வேறு தலைப்புகளில் நடந்தது.இதில் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வரைந்தனர்.
ஆணுக்கு பெண் சமம் அல்லது பெண் சிசுக்கொலை தடுத்தல் அல்லது குழந்தைத் திருமணம் தடுத்தல்,
பெண் வன்கொடுமைக்கு எதிரான ஓவியங்கள்,பாலின வன்கொடுமை, வரதட்சணை கொடுமை,
திராவிட மாடல் ஆட்சியில், பெண்களின் மேம்பாட்டிற்கு அரசு திட்டங்களை உணர்த்தும் ஓவியங்கள் என்ற தலைப்பில் நடந்தது.
போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை, தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய குழு உறுப்பினர் டாக்டர் மாலதி பார்வையிட்டு வாழ்த்தினார்.
ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எப்சிபா ஏஞ்சலா, தி.மு.க., நகர அவை தலைவர் தணிகைகுமரன்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் காளிதாஸ், பள்ளி தலைமையாசிரியர் பொறுப்பு வேலுச்சாமி, ஆகியோர் உடன் இருந்தனர். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, முதல் பரிசு 10 ஆயிரம் ரூபாய்,இரண்டாம் பரிசு 5 ஆயிரம், மூன்றாம் பரிசு 3ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!