Home » கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு அத்தியாவசியமான10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ வழங்கினார்..

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு அத்தியாவசியமான10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ வழங்கினார்..

by Babukanth V
0 comment

கிருஷ்ணகிரி மாவட்டம்
வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு அத்தியாவசியமான 10 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ வழங்கினார்..

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பார்வைக்கு,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வணக்கம்!

கோரிக்கை – 01

கிருஷ்ணாகிரி மாவட்டத்தில் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி பகுதியில் இருபதாயிரத்திற்கும் (20,000) மேற்பட்ட விவசாயிகள் ஐம்பதாயிரம் (50,000) ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதியில் காய்கறிகள் விளைய ஏற்ற சீதோஷ்ண நிலை இருப்பதால் அதிக விளைச்சல் கிடைக்கின்றது. அத்தியாவசிய காய்கறிகளான தக்காளி, காலி ப்ளவர், முட்டைகோஸ், வெண்டைக்காய், பீன்ஸ் மற்றும் கொத்தமல்லி, புதினா போன்றவற்றை விளைவித்து அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றுமதி செய்து வருகின்றனர். விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளைச் சாலைகளில் வைத்து வியாபாரம் செய்வதில் சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு சூளகிரி பகுதியில் வணிக வளாகம் (Shopping Complex) அமைத்து அதிலேயே GRADIND, PACKING, MARKETING மற்றும் LOGISTICS வசதிகளையும் அமைத்துக் கொடுத்தால் விவசாய மக்களுக்கு பேருதவியாக இருக்கும். மேலும் விவசாயிகளின் வாழ்வு மேம்படும் என தங்கனை கேட்டுக் கொள்கிறேன்.

கோரிக்கை – 02

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி பகுதியில் இருபதாயிரத்திற்கும் (20,000) மேற்பட்டவிவசாயிகள் ஐம்பதாயிரம் (50,000) ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மற்றும் ஒசூர் பகுதியில் காய்கறிகள் விளைய ஏற்ற சீதோஷ்ண நிலை இருப்பதால் அதிக விளைச்சல் கிடைக்கின்றது. அத்தியாவசிய காய்கறிகளான (தக்காளி, காலி ப்ளவர், முட்டைகோஸ், வெண்டக்காய், பீன்ஸ்) விளைவித்து அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதோம் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். ஆகவே சூளகிரி பகுதியில் INDO ISRAEL முறையில் தரமான அனைத்து செடிகளுக்கும் காயகறி மகத்துவ மையம் (NURSERY) அமைத்துக் கொடுத்தால் விவசாய மக்களுக்கு பேருதவியாக இருக்கும். மேலும் விவசாயிகளின் வாழ்வு மேம்படும் என தங்களை கேட்டுக் கொள்கிறேன்.

கோரிக்கை: 3

தென்பெண்ணையாறு கர்நாடக மாநில சென்னகேசவா மலையில் உற்பத்தியாகி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், பாகலூர் அருகே தமிழக எல்லைக்குள் நுழைகிறது. தென்பெண்ணையாற்றின் குறுக்கே தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள முதல் அணைக்கட்டு கொடியாளம் அணைக்கட்டாகும். இது, கர்நாடக தமிழ்நாடு மாநில எல்லையிலிருந்து 2கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது.

அந்த அணையிலிருந்து நீர்யேற்றும் முறையில் (Lifftnication) கீழ்கண்ட

  1. பன்னப்பள்ளி பஞ்சாயத்துகுட்பட்ட பன்னப்ப்பள்ளியில் அமைந்துள்ள
    பொதுபணித்துறைக்கு சொந்தமான ஏரி.
  2. அத்திமுகம் பஞ்சாயாத்துக்குட்பட்ட தலவாய் ஏரி பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது.
  3. வெங்கடேசபுரம் பஞ்சாயத்துக்குட்பட் வெங்கடேசபுரம் ஏரி பஞ்சாயத்துக்கு
    சொந்தமானது.
  4. நெரிகம் பஞ்சாயத்தில் அமைந்துள்ள திம்மேகவுண்டன் ஏரி, கொண்ணப்பள்ளி ஏரி இவை இரண்டும் பஞ்சாயத்துக்கு சொந்தமான ஏரிகள்,
    இந்த ஏரிகள் நிரம்பினால் வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட சூளகிரி ஒன்றியத்தில் அமைந்துள்ள 15 பஞ்சாயத்திற்குட்பட்ட 30 ஏரிகளுக்கும் நீர் கிராவிட்டி மூலமாக நிரம்பும், இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். முக்கியமாக அந்த பகுதியில் விளையும் தோட்டக்கலை பயிர்கள் விளைய மிகவும் பயனுள்ளதாக அமையும். இதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் தமிழ்நாட்டிற்கு GDP வருவாய் கிடைக்கும்.

கோரிக்கை: 4

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணவாரணப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட சிங்கிரிப்பள்ளி கிராமம் அருகே நாச்சிகுப்பம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்தல்,

சென்னசந்திரம் ஊராட்சியில் கொண்டப்பநாயக்கனப்பள்ளி கிராமத்தில்
தடுப்பணை அமைக்கும் திட்டம்.

சூளகிரி ஒன்றியத்துக்குட்பட்ட கும்பள்ளம் பஞ்சாயத்திற்க்குட்பட்ட ஒட்டுவங்கா நதியின் குறுக்கே ராபன்தொட்டி, கும்பாளம் பகுதியில் ஒரு தடுப்பணை கட்டினால் அருகில் உள்ள 20 பஞ்சாயத்துகளுக்கு குடிநீர் எடுத்துச்செல்ல ஏதுவாக அமையும்.

கோரிக்கை: 5

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி ஒன்றியத்துக்குட்பட்ட சிங்கிரிப்பள்ளி வாணிஒட்டு அருகே சாமல்பள்ளம் மற்றும் சூளகிரி சின்னாறு ஆறுகள் தென்பெண்ணையாற்றுடன் கூடும் இடத்தில் ஒரு புதிய நீர்த்தேக்கம் அமைத்தால் அப்பகுதியில் அமைந்திருக்கும் விவசாய நிலங்கள் பயனடையும், நிலத்தடி நீரும் உயரும்.

கோரிக்கை: 6

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றும், அரசு பல்நோக்கு தொழில்நுட்ப கல்லூரி ஒன்றும் அமைத்தல் வேண்டும்.

கோரிக்கை: 7

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போது உள்ள சாலையான குரும்பரப்பள்ளி முதல் கொத்தகிருஷ்ணப்பள்ளி வரை உள்ள சாலையை இருபுறமும் அகலப்படுத்தி போக்குவரத்திற்கு ஏற்றதாக அமைத்து தருதல்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போது உள்ள சாலையான குளகிரி முதல் ராமன்தொட்டி வரை உள்ள சாலையை இருபுறமும் அகலப்படுத்தி போக்குவரத்திற்கு ஏற்றதாக அமைத்து தருதல்,

கிருஷ்னகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தற்போது உள்ள சாலையான இராயக்கோட்டை முதல் சூளகிரி வரை உள்ள சாலையை இருபுறமும் அகலப்படுத்தி போக்குவரத்திற்கு ஏற்றதாக அமைத்து தருதல்.

  • கோரிக்கை: 8

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கெலமங்கலம் ஒன்றியத்தில் அமைந்துள்ள இராயகோட்டையில் சுகாதாரம் நிலையம் உள்ளது. அதனை தரம் உயர்த்தி 30 படுக்கை வசதி கொண்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றுதல் (Upgraded),

குளகரி ஒன்றியத்தில் அமைந்துள்ள காலிங்காவரத்தில் புதியதாக ஒரு ஆரம்ப சுகாதாரம் அமைத்தல்,

கோரிக்கை: 9

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாச்சிக்குப்பம் பஞ்சாயத்திற்க்குட்பட்ட கத்திரிப்பள்ளி முதல் காரக்குப்பம் வரை உள்ள சாலையில் மார்கண்டையன் நதியின் குறுக்கே ஒரு புதிய பாலம் அமைத்து தருதல்.

நாச்சிக்குப்பம் பஞ்சாயத்திற்க்குட்பட்ட ஜோடுகுத்தூர் முதல் எர்ரப்பள்ளி வரை உள்ள சாலையில் மார்கண்டையன் நதியின் குறுக்கே ஒரு புதிய பாலம் அமைத்து தருதல்.

பாலனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பாலனப்பள்ளி முதல் கட்டாயம்பேடு கிராமத்திற்கு செல்லும் சாலையில் மார்கண்டையன் நதியின் குறுக்கே ஒரு புதிய பாலம் அமைத்து தருதல்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாரலப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஏக்கல்நத்தம் மலை கிராமத்தில் சுமார் 400 (ST – மலைவாழ் மக்கள்) குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களுக்கு இந்த மலைக்குச் செல்ல வசதி சாலை அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது. தோடர் மழையின் காரணமாக இரண்டாவது வளைவிலும், நான்காவது வளைவிலும், மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதற்கு தடுப்பு சுவர் கட்டவேண்டும். இந்த சாலையில் அமைந்துள்ள தடுப்பு அணைக்கு நீர் தேங்கியுள்ளது. ஊர் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும், மருத்துவமனைக்கும் செல்வதற்கு வழி இல்லை. இந்த இரண்டு இடங்களிலும் பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோரிக்கை: 10

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வி. மாதேப்பள்ளியில் தற்போது இயங்கி கொண்டிருக்கும் துணை மின்நிலையம் 33/11 KV-2X8 MVA (Capacity) அளவு கொண்டுள்ளது. அந்த பகுதியின் மின் தேவையை கருத்தில் கொண்டு 110/33 + 11 KV. தரம் உயர்த்தி மாற்றுதல்,

தீர்ததம் ஊராட்சியில் பக்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தீர்த்தத்தில் புதியதாக ஒரு 33/11 KV.2X8 MVA (Capacity) புதிய துனைமின் நிலையம் அமைத்து தருதல்,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய 10 கோரிக்கைகளை அன்புடன் சமர்ப்பிக்கிறேன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!