Home » கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியுடன் இணைந்து மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியுடன் இணைந்து மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது

by Babukanth V
0 comment

அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியுடன் இணைந்து மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன நிகழ்ச்சியை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி ஓவியப்போட்டி வினாடி வினா கருத்தரங்கம் ஆகியவை நடத்தப்பட்டன நிகழ்ச்சிகளுக்கு பேராசிரியர் டாக்டர் வேல்சாமி வரவேற்புரை நிகழ்த்தினார் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் டாக்டர் ஜெகன் மற்றும் ஸ்டீபன் விக்டர் ஆன்டனி ஆகியோர் முன்னிலை வகித்தனர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் தனபால் தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பவுன்ராஜ் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் மஞ்சப்பைகளை பரிசாக வழங்கினார் கருத்தரங்கில் அவர் பேசும் போது நெகிழிப் பைகளால் நமது பூமி எவ்வாறு கடுமையாக பாதிக்கப்படுகிறது என்பதையும் நெகிழிப் பைகளை தவிர்த்து துணி பைகளை பயன்படுத்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழக அரசு எடுத்து வரும் சிறப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார் கல்லூரி முதல்வர் பேசும் போது மஞ்சப்பை குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பாராட்டு தெரிவித்தார் நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் டாக்டர் கரோலின் ரோஸி டாக்டர் ராஜலக்ஷ்மி திரு ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர் இறுதியில் நூலகர் டாக்டர் தனசீலன் நன்றி கூறினார் நிகழ்ச்சிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுற்றுச்சூழல் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் விஜயகாந்த் செய்திருந்தார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!