Home » ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் மக்களை தேடி இந்திய மருத்துவம்

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் மக்களை தேடி இந்திய மருத்துவம்

by Babukanth V
0 comment

ஊத்தங்கரை, அரசு மருத்துவமனை வளாகத்தில், மக்களை தேடி, இந்திய மருத்துவம், மூலிகை தாவரகன்றுகள் வழங்கப்பட்டது.
இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் அவர்களின் ஆணையின்படி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் ஆலோசனைப்படியும், இந்திய நாட்டின் 75 வது. சுதந்திர தின விழாவை கொண்டாடும் பொருட்டு, மக்களை தேடி இந்திய மருத்துவம், மூலிகை தாவரங்கள் வழங்கும் விழா நடைபெற்றது
நிகழ்ச்சியில், ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் மாரிமுத்து தலைமை வகித்து, சிறப்புரையாற்றி, பொதுமக்களுக்கு மூலிகை தாவர கன்றுகளை வழங்கினார். உதவி சித்த மருத்துவ அலுவலர் ஈஸ்வரி, சித்த மருத்துவத்தில், மூலிகை செடிகளின் நன்மைகளைப் பற்றி தெளிவாக எடுத்துரைத்தார்.
விழாவில் 35, நபர்களுக்கு, ஆடாதோடை, அருநெல்லி, இலுப்பை, முருங்கை, கருவேப்பிலை, பிரண்டை, கொய்யா போன்ற மூலிகை தாவரங்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் செவிலியர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!