Home » ஒசூர் மாநகராட்சியில் தேர்தலில் 45 வார்டுகளில் போட்டியிட 378 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ஒசூர் மாநகராட்சியில் தேர்தலில் 45 வார்டுகளில் போட்டியிட 378 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

by Babukanth V
0 comment

ஒசூர் மாநகராட்சியில் 45 வார்டுகளுக்கான தேர்தலில் போட்டியிட 378 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் ஆன. 28 ஆம் தேதி தொடங்கி பிப். 4 ல் நிறைவு பெற்றது. இறுதி நாளான வெள்ளிக்கிழமை மட்டும் 205 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கடைசி நாளில் ஒசூர் மாநகராட்சி 23 ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னாள் எம்எல்ஏ கே.ஏ மனோகரனின் உறவினர் 25
ஆவது வார்டில் சாமுஸ்டீஸ்வரி மோகன்ராஜ், 35 ஆவது வார்டில் ராதா ஞானசேகரன், 42 ஆவது வார்டில் திமுக மாவட்ட அவைத் தலைவர் அ.யுவராஜ், 43 ஆவது வார்டில் முன்னான் ஒன்றியக்குழுத் தலைவர் புஷ்பா சர்வேஷ் 13ஆவது வார்டில் சட்டக் கலலூரி மாணவி யஷ்வினி, 42 ஆவது வார்டில் அதிமுக சார்பில் ஜெயப் பிரகாஷ், 27 அவது வார்டில் அதிமுக மாநகரச் செயலாளர் எஸ்.நாராயணன், 5 ஆவது வார்டில் முன் னாள் நகர்மன்ற துணை தலைவர் ராமு உள்ளிட்டோர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.

ஒசூர் மாதகராட்சியில் மொத்தம் 378 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக 59, திமுக 71, பாஜக 35, காங்கிரஸ்11, பாமசு-27, சிபிஐ 9, சிபிஎம் 2, தேமுதிக7, விடுதலை சிறுத்தைகள் 2, நாம் தமிழர் கட்சி 29, அம முக14, சுயேச்சைகள் 95 பேர் உட்பட மொத்தம் 378 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!