Home » கிருஷ்ணகிரி மாவட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 1180 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்

கிருஷ்ணகிரி மாவட்ட நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 1180 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்

by Babukanth V
0 comment

கி.கிரி மாவட்டத்தில் 1,180 பேர் வேட்புமனு தாக்கல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 8 நகர்புற உள்ளாட்சி பகுதிகளி லுள்ள, 171 வார்டு உறுப்பினர் பத விக்கு போட்டியிட மொத்தமாக, 1,180 பேர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி நகராட்சியில், 33 வார்டுகளுக்கும், ஒசூர் மாநகராட் சியில் 45 வார்டுகளுக்கும், தேன்க னிக்கோட்டை பேரூராட்சியில்18 வார்டுகளுக்கும், பர்கூர், காவேரிப் பட்டணம், கெலமங்கலம், நாகோ ஜனஹள்ளி, ஊத்தங்கரை ஆகிய பேரூராட்சிகளில் தலா 15 வார்டுகளுக்கும் என மொத்தம், 171 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வரும் 19 ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல்
ஜன 28ல் தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது.

கடைசி நாளான நேற்று ஓசூர் மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட, 206 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

ஓசூர் மாநகராட்சியில் மொத் தமுள்ள 45 வார்டுகளுக்கு 378 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதே போல் கிருஷ்ணகிரி நகராட்சியில் நேற்று, 152 பேர் மனுதாக்கல் செய்தனர். மொத்த முள்ள 33 வார்டுகளுக்கு 264 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இதே போல் பேரூராட்சிகள் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட நேற்று பர்கூரில் 78 பேரும், தேன்கனிக்கோட்டையில் 48 பேரும், காவேரிப்பட்டணத்தில் 46 பேரும், கெலமங்கலத்தில் 39 பேரும், நாகோஜனஹள்ளியில்
69 பேரும், ஊத்தங்கரையில் 42 பேர் என மொத்தம் 322 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆறு பேரூராட்சிகளில் உள்ள, 93 வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தமாக 538 பேர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ளனர்.

மாவட்டம் முழுவதுள்ள, 8 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் உள்ள, 171 வார்டுகளுக்கு, 1,180 பேர் வேட்புமனுதாக்கல் செய்துள் ளனர். நேற்று ஒரே நாளில் மாவட் டத்தில், 680 பேர் மனு தாக்கல் செய்தனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடை பெறுகிறது. வேட்புமனுக்கள் திரும்ப பெற வரும், 7 கடைசி நாளாகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!