Home » வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாணவ மாணவிகள் உற்ச்சாகத்துடன் வருகை

வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாணவ மாணவிகள் உற்ச்சாகத்துடன் வருகை

by Babukanth V
0 comment

வெண்ணாம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி
நீண்டநாள்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ மாணவிகள் உற்சாகம், கொரோனா தடுப்பு விதிமுறைகளின் படி பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் அனுமதி.

………………………………….
தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்றுநோய் குறைத்து வருவதால் தமிழக அரசு தமிழகம் முழுவதும் செப்டம்பர் மாதம் – 1-ம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்து இருந்தது.


இதன்படி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட
வெண்ணம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டது. பல மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர். பின்னர் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து அமர வைக்கவும், மாணவர்களுக்கு கொரோன தொற்று ஏற்படாதவாறு கொரோனா விதிமுறைகளை நடைமுறைப்படுத்த பள்ளிகளில் கிருமி நாசினி தெலித்தும், சுத்தம் செய்தும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது,


இதன் முன்னதாக பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சேகர் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அனைவரும்க்கும் கிரிமிநாசினி மற்றும் முககவசம், சாக்லேட், ஆகிவை கொடுத்து பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டனர், பின்னர் ஒவ்வொரு பெஞ்சுகளிலும் இரண்டு மாணவர்களை உட்காரவைக்கப்பட்டு ஆசிசியர்கள் நீண்டநாள்களுக்கு பிறகு வகுப்புகளை
நடத்தினார்கள். மேலும் இந்த விழாவின் போது சிறப்பு அழைப்பாளர்களாக
முன்னாள் பர்கூர் ஒன்றிய திமுக சேர்மன் ராஜேந்திரன் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ஜெசிந்தா
வில்லியம்ஸ்,ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆறுமுகம் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொருளாளர் ரவிச்சந்திரன் சங்க உறுப்பினர்கள் நாகராஜ், ஜான் பிரிட்டோ மற்றும் பள்ளி தலமமைஆ ஆசிரியர் திருமதி நேசபிரபா மற்றும் ஆசிரியர்களான சகாய ஆரோக்கியராஜ், சதீஷ் , திருமதி அமலாஆரோக்கியமேரி, முனிராஜ் திருமதி சிவகாமி சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!