Home » போச்சம்பள்ளி 4 வழிச்சலையில் நெஞ்சை பதபதவைக்கும் விபத்து – இரு சக்கர வாகனத்தில் வந்த முருகன் உயிரிழப்பு

போச்சம்பள்ளி 4 வழிச்சலையில் நெஞ்சை பதபதவைக்கும் விபத்து – இரு சக்கர வாகனத்தில் வந்த முருகன் உயிரிழப்பு

by Babukanth V
0 comment

போச்சம்பள்ளி 4 வழிச்சலையில் நெஞ்சை பதபதவைக்கும் விபத்து – இரு சக்கர வாகனத்தில் வந்த முருகன் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி 4 வழிச்சாலையில் நெஞ்சை பதபதவைக்கும் விபத்து இன்று மாலை நடைபெற்றது. அரூர் சந்திராபுறத்தை சேர்ந்த சங்கர் (41) என்பவருக்கு சொந்தமான டாரஸ் லாரியை அதே ஊரைச்சேர்ந்த அன்பு (39) என்பவர் ஓட்டி வந்தார். ஓசூரில் எம்.சேன்ட் ஏற்றுவதற்காக போச்சம்பள்ளி 4 வழிச்சாலை வந்தபோது எதிரை டிவிஎஸ் இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த பூதனூர் கிராமத்தை சேர்ந்த முருகன் (60), அவரது மனைவி நல்லமாள் (50) பேரன் இன்பரசன் (7) ஆகியோர் மீது மோதியதில் முன் சக்கரத்தில் சிக்கி சற்று தூரம் இழுத்து சென்றது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கூச்சலிட்டு சப்தம்போடவே ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தினார். பின்னர் மூவரையும் மீட்டு போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு அனுமதித்தனர். அப்போது சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார். அவரது மனைவி நல்லம்மாள் மற்றும் பேரன் இன்பரசன் ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். முருகன் தனது மனைவி நல்லம்மாள் மற்றும் பேரன் இன்பரசன் ஆகியோருடன் அருகே மங்கலப்பட்டி கிராமத்தில் உள்ள தனது மகள் மல்லிகாவை பார்பதற்காக சென்றபோது இவ்விபத்து நடந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் விசானை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!