Home » பாலக்கோடு பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் போக்குவரத்தை ஒரு வழி பாதையாக மாற்ற முடிவு.

பாலக்கோடு பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் போக்குவரத்தை ஒரு வழி பாதையாக மாற்ற முடிவு.

by Babukanth V
0 comment

பாலக்கோடு பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் போக்குவரத்தை ஒரு வழி பாதையாக மாற்ற முடிவு.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருராட்சியில் கவுன்சிலர்களின் முதல் கூட்டம் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.
செயல் அலுவல் டார்த்தி முன்னிலை வகித்து வரவேற்புரை ஆற்றினார்.
கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டத்தில் பாலக்கோடு பேரூராட்சி நகர கடைதெரு, பேருந்து நிலையம், எம்.ஜி.ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தடுக்கவும் போக்குவரத்தில் மாற்றம் கொண்டு வர முக்கிய தீர்மானமாகவும் இப்பகுதிகளில் ஒரு வழி பாதையாக மாற்றவும், குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை விரைவில் முடித்து தண்ணீர் விநியோகம் செய்யவும், மத்திய மாநில நிதியை பெற்று வளர்ச்சி பணிகள் செய்யவும், நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள சாக்கடை கால்வாய் பிரச்சனை, தெருக்களில் பழுதாகி உள்ள மின் விளக்குகளை மாற்றுதல் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க ஆலோசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள், சுகாதார ஆய்வாளர் ரவீந்திரன், டெக்னிசியன், அலுவலர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் துணைத் தலைவர் தஹசீனா இதாயத்துல்லா நன்றி தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!