Home » காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில் மரக்கன்றுகள் நட்டு உலக பூமி தினம் கொண்டாடப்பட்டது.

காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில் மரக்கன்றுகள் நட்டு உலக பூமி தினம் கொண்டாடப்பட்டது.

by Babukanth V
0 comment

உலக பூமி தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி…..காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில் உலக பூமி தினம் கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் திட்டம் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் பொன் முடி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜேகேஎஸ் பாபு, பேரூராட்சி தலைவி அம்சவேணி செந்தில்குமார்., தலைமை ஆசிரியர் வேந்தன், வட்டார வள மேற்பார்வையாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி கலந்துகொண்டு மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியபோது நமது நாட்டின் மொத்த பரப்பளவில் முப்பது சதவிகிதத்திற்குமேல் உள்ள நிலப்பகுதியில் மரங்கள் இருந்தால் மழைபொழிவு சரியாக இருக்கும் மேலும் உயிரினங்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும் எனவே நாம் மரம் வளர்ப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் அமுதா பழனி, கால்பந்து சத்தியமூர்த்தி ஆகியோரும் பேருராட்சி சார்பில் கவுன்சிலர்கள் தமிழ்செல்வி சோபன்பாபு, நித்யா முத்துக்குமார்., கோகுல் ஆகியோரும் அரிமா சங்கம் சார்பில் மாது., வாசவி ஆகியோரும் முக்கிய பிரமுகர்கள் சார்பில் செந்தில்குமார், பாரதி, சுரேஷ்பாபு ஆகியோரும் தேசிய பசுமைப்படை மாணவர்களும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேசிய பசுமைப்படை ஒன்றிய செயலாளர் நல்லாசிரியர் பவுன்ராஜ் செய்திருந்தார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!