Home » கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வேலையற்ற 18முதல் 45 வயது வரை உள்ள ஆண் பெண் இருபாலருக்கும் இந்தியன் வங்கி சார்பில் எண்ணற்ற சுயதொழில் பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த வேலையற்ற 18முதல் 45 வயது வரை உள்ள ஆண் பெண் இருபாலருக்கும் இந்தியன் வங்கி சார்பில் எண்ணற்ற சுயதொழில் பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகிறது.

by Babukanth V
0 comment

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில் உள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பல்வேறு தொழில்கள் துவங்க இலவசமாக பயிற்சி வழங்கப்படுகிறது.
இது குறித்து பயிற்சி நிறுவன இயக்குனர் ஜகன்நாத் வெளியிட்டுள்ள அறிக்கை:

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணையில், இந்தியன் வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் சார்பில், மாவட்டத்தில் உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு தொழில் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் மானியத்துடன் கூடிய கடன் பெறவும் வழிவகை செய்யப்படுகிறது.

ஜூன் 20 ஆம் தேதி காளான் வளர்ப்பு பயிற்சிக்கான நேர்காணல் நடைபெறும்.

இதற்கு 18 முதல் 45 வயது உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பயிற்சியின் போது, சீருடை, காலை உணவு, மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி காலங்களில் பயிற்சி உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. பயிற்சி முடிவில் சான்றிதழ் மற்றும் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். கல்வித் தகுதியாக குறைந்த பட்சம் எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். பயிற்சி பெற விருப்புவோர் என்ற இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 94422 47921, 94888 74921 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!