Home » கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மினி மாரத்தான் ஓட்டத்ம். மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்து மாரத்தான் ஓட்டத்தில் கலந்துக்கொண்டார்.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மினி மாரத்தான் ஓட்டத்ம். மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி கொடியசைத்து துவக்கி வைத்து மாரத்தான் ஓட்டத்தில் கலந்துக்கொண்டார்.

by Babukanth V
0 comment

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மினி மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப. அவர்கள் இன்று (27.11.2022) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மினி மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப. அவர்கள் இன்று (27.11.2022) கொடியசைத்து துவக்கி வைத்து மாரத்தான் ஓட்டத்தில் கலந்துக்கொண்டார்.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்துறை 100 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் முன்னோட்டமாக ஒளிசுடர் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் தொடர் ஓட்டமாக சென்றது. மேலும் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் எஸ்.முதுகானப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச இரத்ததான முகாம் நடைபெற்றது. மேலும் சுகாதார பணியாளர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் மாணவமாணவியருக்கு ஓவியம், கட்டுரை போட்டிகள் நடைபெற்றதையொட்டி வெற்றிபெற்ற மாணவ மாணவியர்கள் மற்றும் அலுவலர்கள், பணியாளர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்று கிருஷ்ணகிரி மருத்துவ கல்லுாரி மாணவ மாணவியர்கள், அரசு மருத்துவர்கள், சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள், ரெட்கிராஸ் சங்க பிரதிநிதிகள், வணிகர் சங்க பிரதிநிதிகள், மாணவமாணவியர்கள் என 700 மேற்பட்டோர்கள் மினி மாரத்தான் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். இத்தொடர் ஒட்டம் புதிய பேருந்து நிலையத்தில் துவங்கி இராயக்கோட்டை மேம்பாலம், பெத்ததாளப்பள்ளி தாலுக்கா காவல் நிலையம் வழியாக திரும்பி மாவட்ட விளையாட்டு மைத்தானத்தில் முடிவுற்றது.

மினிமாரத்தான் போட்டிகளில் கலந்துக்கொண்டு முதல் பரிசு வென்ற எலத்திகிரியை சேர்ந்த மாணவர் ஜார்ஜ், இரண்டாம் பரிவு வென்ற பாலக்கோடு சேர்ந்தமாணவர் பெருமாள், மூன்றாம் பரிசு வென்ற வி.மாதேப்பட்டி சேர்ந்த மாணவர் மேகநாதன், பெண்கள் பிரிவில் முதல் பரிசு உமாவதி, இரண்டாம் பரிசு வி.பிரியா, மூன்றாம் பரிசு மரு.சங்கீதா ஆகியோருக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களும், மேலும் மாரத்தான் போட்டியில் கலந்துக்கொண்ட மருத்துவர்கள், சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.வி.ஜெயசந்திர பானுரெட்டி இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.ரமேஷ்குமார், மருத்துவர்கள், மரு.திருலோகன், மரு.விமல், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு. செல்வி, கிருஷ்ணகிரி வட்டாட்சியர் திரு. சம்பத், மாவட்ட ஆய்வாளர் திருமதி.வளர்மதி, சுகாதாரத்துறை கண்காணிப்பாளர் உடற்கல்வி ஆய்வாளர் திரு.கண்ணன், ரெட்கிராஸ் பிரதிநிதி திரு.செந்தில்குமார் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவ மாணவியர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!