Home » கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் தொடர் மழைக்கு மூதாட்டியின் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதம். நல்வாய்ப்பாக தப்பிய மூதாட்டிக்கு உடனடியாக நிதி உதவி அளித்த ஊராட்சி மன்ற தலைவர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் தொடர் மழைக்கு மூதாட்டியின் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதம். நல்வாய்ப்பாக தப்பிய மூதாட்டிக்கு உடனடியாக நிதி உதவி அளித்த ஊராட்சி மன்ற தலைவர்

by Babukanth V
0 comment

போச்சம்பள்ளி தொடர் மழைக்கு மூத்தாட்டியின் கூரை வீட்டின் சுவர் இடிந்து சேதம் – நல்வாய்ப்பாக தப்பிய மூதாட்டி – உடனடியாக பண உதவி அளித்த ஊராட்சி மன்ற தலைவர்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த திருவயலூர் கிராமத்தை சேர்ந்தவர் சகுந்தலா (67). கணவரை இழந்த இவர் கடந்த 4 ஆண்டுகளாக தனது கூரை வீட்டில் தனிமையில் வசித்து வருகிறார். மாண்டஸ் புயல் காரணமாக போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சகுந்தலா வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. வீடு இடிந்து விழும் சப்தம் கேட்டு வெளியே வந்த மூதாட்டி, வீடு இடிந்து விழுந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் பக்கத்து குடியிருப்பில் தற்காலிகமாக தஞ்சமடைந்தார். இன்று காலை ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ரங்கநாதன் நேரில் பார்வையிட்டு மூதாட்டிக்கு பண உதவி செய்தார். கூரை வீடு மேலும் சேதமடைந்து இருப்பதால் வீட்டில் வசிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதோடு, மூதாட்டியை தற்காலிகமாக மாற்று இடத்தில் தங்க ஏற்பாடு செய்து கொடுத்தார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!