Home » சட்டத்திற்கு புறம்பாகவும் பொதுமக்களளின் நலனுக்கு எதிராகவும் இருக்கும் கிருஷ்ணகிரி சுங்கசாவடியை உடனடியாக அகற்றிட மக்களின் காவல் தெய்வம் மாண்புமிகு முதல்வர் தளபதியார் அவர்கள் ஆவண செய்யவேண்டும்என வேண்டி கேட்டுக்கொள்கின்றேன்.

சட்டத்திற்கு புறம்பாகவும் பொதுமக்களளின் நலனுக்கு எதிராகவும் இருக்கும் கிருஷ்ணகிரி சுங்கசாவடியை உடனடியாக அகற்றிட மக்களின் காவல் தெய்வம் மாண்புமிகு முதல்வர் தளபதியார் அவர்கள் ஆவண செய்யவேண்டும்என வேண்டி கேட்டுக்கொள்கின்றேன்.

by Babukanth V
0 comment

தினந்தோறும் பொதுமக்கள்சென்று வரக்கூடிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை அலுவலகம், மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, வட்டார போக்குவரத்து அலுவலகம், வேளாண்மை அலுவலகம், சுகாதார அலுவலகம் மற்றும் பல்வேறு மாவட்ட அரசு அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு சென்று வருவதற்கு பெரும் இடையூறாகவும், ஒவ்வொரு முறையும் ரூபாய் 100க்கும் மேலாக செலவிட வேண்டியுள்ளது. குறிப்பாக பழைய மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு 2800க்கும் மேற்பட்ட நோயாளிகள் தினந்தோறும் வந்து பயன்பெற்ற நிலையில் தற்பொழுது இந்த சுங்க சாவடியைதாண்டியே புதிய மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளதால் பாதிக்கும் குறைவாக 1500 க்கும் குறைவான நோயாளிகளே வந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது கிருஷ்ணகிரி நகர மக்களின் அடிப்படை சேவையையே முடக்கும் வகையில் அமைந்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாகவும் பொதுமக்களளின் நலனுக்கு எதிராகவும் இருக்கும் இந்த சுங்க சாவடியை அகற்றிட பலமுறை முயன்றும் தேசிய நெடுஞ்சாலை துறை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. ஆகையால் மக்களின் காவல் தெய்வம் மாண்புமிகு முதல்வர் தளபதியார் அவர்கள் இந்த சுங்கசாவடியை உடனடியாக அகற்றிட ஆவண செய்யவேண்டும் என மிகவும் வேண்டி கேட்டுக்கொள்கின்றேன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!