Home » பர்கூர் சட்டமன்ற தொகுதியில் நீண்டநாட்களாக தீர்க்கபடாத பல முக்கிய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் எம்எல்ஏ சட்டபேரவையில் கோரிக்கை

பர்கூர் சட்டமன்ற தொகுதியில் நீண்டநாட்களாக தீர்க்கபடாத பல முக்கிய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் எம்எல்ஏ சட்டபேரவையில் கோரிக்கை

by Babukanth V
0 comment

பர்கூர் சட்டமன்ற தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத முக்கியமான கோரிக்கைகளை தங்களின் மேலான பார்வைக்கு கொண்டு வருகின்றேன்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள படேதலா பெரிய ஏரியிலிருந்து பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் வகையில் வெண்ணம்பள்ளி,ஓரப்பம், காட்டகரம் ஏரி உட்பட 11 ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க வெட்டப்பட்ட கால்வாயினை மறுசீரமைப்பு செய்து ஆழமான பகுதிகளில் கட்டுமானம் மேற்கொண்டும்,மேலும் அச்சமங்கலம்ஏரியிலிருந்துபுதிதாக கால்வாய் வெட்டி குட்டூர் ஏரிக்கும், காகங்கரை ஏரிக்கும்தண்ணீர் கொண்டு செல்ல ஆவண செய்யுமாறு வேண்டி கேட்டுக் கொள்கின்றேன்.
10 ஆண்டுகளுக்கு முன்பே போச்சம்பள்ளிக்கு வட்டார வளர்ச்சி அலுவலகம் (BDO) அறிவிக்கப்பட்டது, இது நாள்வரை இத்திட்டம் நிலுவையிலே உள்ளது. அதற்கான அலுவலகத்தை கட்டி உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாண்புமிகு முதல்வர் அவர்கள் ஆவண செய்ய வேண்டுகிறேன்.
பர்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராஜ கால்வாயின் ஆக்கிரமிப்புகளை அகற்றி மழை நீர் வடிகால் அமைத்து தர ஆவண செய்யுமாறு வேண்டி கேட்டுக் கொள்கின்றேன்.
காவேரிப்பட்டிணம் ஒன்றியத்துக்குட்பட்ட சந்தனூர் ஏரியிலிருந்து உபரிநீரை கொட்டாவூர், பாப்பாரப்பட்டி, சின்ன புளியம்பட்டி வையம்பட்டி,இருமத்தூர்,காராமூர் மற்றும் சாமாண்டப்பட்டி ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் வழங்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் இருளர் மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குடியிருக்கும் வீடுகள் மிகவும் பழமையானதாகவும், எந்த நேரத்திலும் இடிந்து விழும் சூழ்நிலையில் உள்ளதாலும் இவர்களுக்கு புதிய வீடுகளை கட்டித் தந்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி தென்னைக்கும் மற்றும் கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜாவுக்கும் புவிசார் குறியீடு பெற்று தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதற்காக கிருஷ்ணகிரி விவசாயிகளின் சார்பாக மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்
மாங்கனி மாவட்டமான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மாமரங்களில் தற்போது த்ரிப்ஸ் (சிறு பூச்சிகள் ) பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மாங்காய் விளைச்சல் குறைந்தது மட்டுமல்லாமல் தரமும் குறைந்து காணப்படுகிறது.
ஆதலால் “மா” மற்றும் “தென்னைக்கு” சிறந்த வேளாண் விஞ்ஞானிகளை வைத்து சிறப்பு ஆராய்ச்சி மையம் அமைத்து விவசாயிகளுக்கு தேவையான பூச்சிக்கொல்லிகள், சாகுபடி மற்றும் அறுவடை பற்றிய விழிப்புணர்வை வழங்கவும், “மா” செடிக்கு காப்பீடு தொகை வழங்க ஆவணச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!