Home » காவேரிபட்டிணத்தில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட தொடர் ஓட்டத்தை காவல் ஆய்வாளர் கபிலன் துவக்கிவைத்தார்

காவேரிபட்டிணத்தில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட தொடர் ஓட்டத்தை காவல் ஆய்வாளர் கபிலன் துவக்கிவைத்தார்

by Admin
0 comment

சுதந்திர இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிடு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஜூனியர் சேம்பர் இன்டர்னேஷ்னல் சார்பில் வலிமையான இந்தியா என்ற தலை தொடர் ஓட்டம் நடைப்பெற்றது,கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து துவங்கிய இந்த ஓட்டத்தை கிருஷ்ணகிரி டவுண் காவல் ஆய்வாளர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு கொடி அசைத்து துவக்கிவைத்தார்.இந்த தொடர் ஓட்டத்தின்போது சேலம் யுனிட் 2 மற்றும் தமிழ்நாடு சிக்னல் கம்பெனியின் தேசிய மாணவர் படையை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துக்கொண்டு வலிமையான இந்தியாவை உருவாக்குவேம் என்பதை வழியுறுத்தி நகரின் முக்கிய சாலைவழியாக சென்ற இவர்கள் பொதுமக்களிடையே உடற்பயிற்சி மற்றும் யோக பயிற்சிகளை தினமும் செய்து தங்களின் உடலை நலனை பாதுகாத்திட வழியுறுத்தி விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்கள்.மேலும் பொதுமக்களிடையே விழிப்புணர் ஏற்படுத்தியமாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.இந்தவிழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது ஜூனியர் சேம்பர் தலைவர் சிவகுமார், செயலாளர் யாசின் துணைத்தலைவர் வடிவேல், முன்னால் அரிமா தலைவர் அசோகன் மற்றும் பள்ளியின் தலமை ஆசிரியர் சேரலநாதன், சிவகுமார், மத்மாவதி, ரமேஷ்பாபு, ராஜேஷ்வரி மற்றும் காவேரிப்பட்டிணம், கிருஷ்ணகிரி, நாகரசம்பட்டி, பாரூர் ஆகிய பள்ளிகளை சேர்ந்த தேசிய மாணவர் படைஆசிரியர்கள் சகாதேவன், கோபு, கசிரேசன், ராஜேசேகர், உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்..

You may also like

Leave a Comment

error: Content is protected !!