Home » கிருஷ்ணகிரி ராயகோட்டைரோடு மேம்பாலம் கீழ் போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் உடனடி அபராதம் வசூலிக்கப்படும்

கிருஷ்ணகிரி ராயகோட்டைரோடு மேம்பாலம் கீழ் போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் உடனடி அபராதம் வசூலிக்கப்படும்

by Admin
0 comment

கிருஷ்ணகிரியில், ராயக்கோட்டை மேம்பாலத்தின் கீழ் ஐந்து சாலை சந்திப்பு உள்ளது. இங்கு போக்குவரத்து சிக்னல் இருந்தாலும், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் விபத்தைக் குறைக்க போக்குவரத்து போலீசார், ஐந்து பக்கத்திலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த, சிக்னலில் ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றை நேற்று டி.எஸ்.பி., சரவணன் துவக்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், கிருஷ்ணகிரியில் முதல்முறையாக விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்பீக்கர்கள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் விபத்தைக் குறைக்க ஐந்து பக்கமும் கோடுகள் அமைக்கப்படும். கோட்டைத் தாண்டி வாகனத்தை நிறுத்தினாலும், சிவப்பு மற்றும் ஆரஞ்சி விளக்கு எரியும் போது வாகனத்தை ஓட்டினாலும் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். மேலும் அனைத்து சாலைகளிலும் வாகனங்களை வரிசையாக நிறுத்தி செல்ல வேண்டும். விபத்தைக் குறைக்க பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும் போலீசாருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், டவுன் இன்ஸ்பெக்டர் கபிலன், தாலுகா இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்.ஐ., சிவசந்தர், போக்குவரத்து எஸ்.ஐ., நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!