Home » தேன்கனிக்கோட்டையில் இன்று பேட்டராய சுவாமி கோவில் தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

தேன்கனிக்கோட்டையில் இன்று பேட்டராய சுவாமி கோவில் தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

by Admin
0 comment

தேன்கனிக்கோட்டையில் இன்று பேட்டராய சுவாமி கோவில் தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சௌந்தரவல்லி சமேத ஸ்ரீ பேட்டராய் சுவாமி கோயில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமான வருகை தந்து சாமி தரிசனம் செய்கின்றனர் .இக்கோயிலின் கருவறையில் மூலவரான பேட்டராய ஸ்வாமி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார் தனி சன்னதியில் ஸ்ரீ சௌந்தரவல்லி தாயார் பக்தர்களுக்கு காட்சி தருகிறார் பழமையும் சிறப்புமிக்க இந்தக் கோயிலின் தேர் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டு தேர் திருவிழா நிகழ்ச்சிகள் கல்யாண உற்சவத்துடன் துவங்கி கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம், அம்சவாசன உற்சவம் நடைபெற்றது நேற்று இரவு செவ்வாய்க்கிழமை 9 மணிக்கு கஜேந்திர மோக்ஷம் என்ற ராமபாணம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று 13/04/2022 காலை நடைபெற்றது முதலில் சௌந்தரவல்லி தாயார் தேரை இழுத்துச் செல்லப்பட்டது தொடர்ந்து ஸ்ரீதேவி பூதேவி பேட்டராய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட ஐந்து அடுக்கு தேரில் வைத்து சுவாமிக்கு பூஜைகள் செய்யப்பட்டது

இதை தொடர்ந்து தளி ஒன்றிய குழு தலைவர் சீனிவாசலு ரெட்டி, தேன்கனிகோட்டை பேருராட்சி தலைவர் சீனிவாசன் பேரூராட்சி செயல்அலுவலர் மஞ்சுநாத் ஹிந்து அறநிலைதுறை இணை ஆணையாளர் பாஸ்கர் ஆகியோர் வடம்பிடித்து தேரோட்டதை தொடங்கிவைத்தனர் பக்தர்கள் வடம் பிடித்து தேரைஇழுத்துச் சென்றனர் அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷத்துடன் கோஷங்களை முழங்கினார்கள் விழாவை முன்னிட்டு பக்தர்கள் தங்கள் மனதில் நினைத்தது நிறைவேற வேண்டி வாழைப்பழத்தில் தவணை இலை அருகம்புல் சுற்றி தேரின் மீது எரிந்தனர் மேலும் தங்களின் விளை நிலங்களில் தானியங்கள் நன்கு விளையும் வேண்டும் என வேண்டிக் கொண்டு தேரின் மீது நவதானியங்களை இருந்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்

நகரமெங்கும் அன்னதானம், நீர்மோர், பானகம், பாசிப்பருப்பு ஆகியவற்றை திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இத்திருவிழாவில் தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் கர்நாடக ஆந்திர மாநில இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!