Home » கர்நாடக மாநில கோலார் மாவட்டத்தின் யார்கோல் அணை நிரம்பி வழிவதை அடுத்து அம்மாவாட்ட முக்கிய அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

கர்நாடக மாநில கோலார் மாவட்டத்தின் யார்கோல் அணை நிரம்பி வழிவதை அடுத்து அம்மாவாட்ட முக்கிய அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்

by Admin
0 comment

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தின் யார்கோல் அணை நிரம்பி வழிவதை அடுத்து அம்மாவாட்ட முக்கிய அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள யார்கோல் கிராமத்தில் மார்க்கண்டேய ஆற்றின் குறுக்கே யார்கோல் அணை அமைந்துள்ளது. பங்கார்பேட்டை, மாலூர், கோலார் நகரங்கள் மற்றும் வழியில் உள்ள 45 கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம்.திட்டமானது 414 மீ நீளம் மற்றும் அதிகபட்சமாக 40 மீ உயரம் கொண்ட கான்கிரீட் புவியீர்ப்பு அணையை உள்ளடக்கியது. அணையின் மொத்த சேமிப்பு கொள்ளளவு 500 மில்லியன் கன அடி நீர். இந்நிலையில் கடந்த சில தினங்களில் பெய்த தொடர் மழை காரணமாக அணையின் மொத்தா கொள்ளாவும் நிரம்பியது.அணைலிருந்து வெளியேறும் உபரி நீர் மார்க்கண்டயே நதியின் தமிழக எல்லையான தீர்த்தம், தரணிசந்திரம், சின்ன கொத்தூர், நெடுசாலை,மாரசந்திரம்,எண்ணெக்கொள் வழியாக சென்று தென் பெண்ணை ஆற்றில் கலந்து கிருஷ்ணகிரி அணைக்கு வந்து சேர்கிறது.

இந்நிலையில் கோலார் மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மற்றும் மேலவை உறுப்பினர்களும், அமைச்சர்களும் கலந்து கொண்டு அணையை ஆய்வு செய்த பின்னர் அப்பகுதி பொதுமக்கள் மேல தாளத்துடன், கும்ப மரியாதை செலுத்தி அணைக்கு மலர் தூவி பூஜை செய்து வழிப்பட்டனர்.பின்னர் விழாவை முடித்து சென்ற கோலர் மாவட்ட மேலவை உறுப்பினர் திரு முனிசாமி ஸ்ரீ எஸ் அவர்கள் அணையை பார்வையிட வந்த பொதுமக்களிடை போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டர். பின்பு அவரே கீழே இரங்கி அங்கிருந்த போக்குவரத்து நெரிசலை சரிசெய்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.அணையை பார்வையிட வந்த பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. எனவே அம்மாவட்டத்தின் புதிய சுற்றுள்ளா தளமகா யார்கோல் அணை உருவெடுத்துள்ளது.

வேப்பனப்பள்ளி செய்தியாளர்
மகேந்திரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!