Home » கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று (18-03-2023 சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று (18-03-2023 சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிக்கை

by Admin
0 comment

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவிற்கிணங்க, ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் 1.08.2022 முதல் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்பணி இம்மாவட்டத்தில் தற்போது 77% சதவீதம் முடிவடைந்துள்ளது. இப்பணியினை துரிதப்படுத்தும் நோக்கில் 18.03.2023 (சனிக்கிழமை) அன்று நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட தேதியில் அனைத்து வாக்குசாவடி நிலை அலுவலர்களும் வீடுவீடாக சென்று களப்பணி மேற்கொண்டு வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை பெற்று 6B படிவம் மற்றும் GARUDA App மூலம் உள்ளீடு செய்யும் பணி மேற்கொள்வார்கள். அலுவலர்கள் இப்பணி தொடர்பாக படிவம் 6B சேகரிக்கும் போது பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறும், வாய்ப்பினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்து பயனடையும்மாறு தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பொதுமக்கள் கீழ்காணும் இணைய வழிகள் மூலம் தங்கள் வீடுகளிலிருந்தே பெற elector – facing portals / Apps like NVSP, VHA ஆகியவற்றின் மூலம் இணைய வழியில் (online) வாக்காளர்களே நேரடியாக இணைக்கலாம். இணைக்க முடியாதவர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO) GARUDA App அல்லது படிவம் 6B-ஐ சமர்ப்பித்து வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 1950 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்கள் பெறலாம். மேற்கண்ட தேர்தல் ஆணையத்தின் சேவைகளை தவறாமல் பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தீபக் ஜேக்கப் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!