Home » கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டிசமத்துவ நாள் விழாவாக கொண்டாடப்பட்டது

கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டிசமத்துவ நாள் விழாவாக கொண்டாடப்பட்டது

by Poovizhi R
0 comment

கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்அம்பேத்கர் பிறந்த தினத்தையொட்டிசமத்துவ நாள் கொண்டாடப்பட்டதுகிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் செயல்படும் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த தின சமத்துவநாள் கொண்டாடப்பட்டது.தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த தினமான ஏப்ரல் 14-ம் நாள் சமத்துவ நாளாக கடந்த 2022-ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கல்லூரியின் தாளாளர் முன்னாள் எம்.பி.திரு.பெருமாள், கல்லூரியின் தலைவர், கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருமதி வள்ளிபெருமாள் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர், பெரியார் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். பெரியார் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் திரு. அறிவழகன் சமத்துவ நாள் உறுதிமொழி வாசித்தார்.சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைத்த அண்ணால் அம்பேத்கர் பிறந்த தினத்தன்று உறுதிமொழி ஏற்று, சாதியபாகுபாடு இல்லா சமத்துவ சமுதாயத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நிகழ்வில் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் திரு.முருகன், பேராசிரியர்கள், மாணவர்கள், நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!