அறிஞர் அண்ணா கல்லூரியில் குறும்பட நிகழ்ச்சி விழா. கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 13.04.2023 அன்று குறும்பட நிகழ்ச்சி விழா நடைபெற்றது. வணிகவியல் துறை தலைவர் முனைவர் ஜெகன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் சு.தனபால் அவர்கள் தலைமையில் விழா நடைபெற்றது. முதல்வரின் தலைமை உரையில் மாணவர்கள் முதன்முதலில் ஒரு பகுத்தறிவு சிந்தனையும் முன்னேற்ற சிந்தனையும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் பல்வேறு பாடத்திட்டங்களிலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் விளையாட்டுத்துறையிலும் மாணவர்கள் பங்கு பெற வேண்டும் என்று தன்னுடைய தலைமையில் முதல்வர் அவர்கள் பேசினார். .இவ்விழாவில் திரைப்பட நடிகருமான வன்முகம் திரைப்படம் நடித்த நடிகருமான திரு கதிரவன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் குறும்படத்திற்கும் 10 நிமிடங்கள் முதல் 15 நிமிடங்கள் வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அறிஞர் அண்ணா கல்லூரி மாணவர்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள். மாணவர்களுக்கு ஒரு உற்சாகமும் விழிப்புணர்வாகவும் இந்த குறும்படம் நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக நன்றியுரை கணினி பயன்பாட்டு துறை பேராசிரியர் டி தமிழரசன் அவர்கள் நன்றியுரை கூறினார்.