Home » பாலக்கோடு அருகே பாரதி நகரில் பாமக சார்பில் அமாவசை முன்னிட்டு இரவு ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

பாலக்கோடு அருகே பாரதி நகரில் பாமக சார்பில் அமாவசை முன்னிட்டு இரவு ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

by Poovizhi R
0 comment

பாலக்கோடு அருகே பாரதி நகரில் பாமக சார்பில் அமாவசை முன்னிட்டு இரவு ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பாமக கிழக்கு ஒன்றியம் சார்பில் வேளாவள்ளி ஊராட்சி பாரதி நகரில் இன்று அமாவாசை இரவு கூட்டம் கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை கந்தசாமி தலைமையில் நடைப்பெற்றது.இக் கூட்டத்திற்க்கு முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் வி.எம்.சேகர், முன்னாள் துணைத் தலைவர் சின்னசாமி, ஒன்றிய அமைப்பு செயலாளர், கவுன்சிலர் சத்யசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தார்.இக் கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சி பணிகளில் தொண்டர்கள் மும்முரமாக பணியாற்ற வேண்டும், வீடு வீடாக சென்று மருத்துவர் அய்யா அவர்களின் கொள்கைகளை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.உழைக்கும் பட்டாளி மக்களின் நலனுக்காக பாமக செயல்பட்டு வருகிறது, தமிழக மக்களின் நலனை சார்ந்தே பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகள் இருக்கும். கட்சி பேதமின்றி அனைத்து வன்னியர்களும் 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு பெற முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.10.5 சதவீத இட ஒதுக்கிடு சட்டம் நிறைவேற்ற அனைவரும் தமிழக முதல்வர் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தபட்டோர் ஆணைய தலைவர் நீதியரசர் பாரதிதாசன் ஆகியோருக்கு கடிதம் அனுப்ப வேண்டும் .உள்ளிட்டவைகள் குறித்து பேசப்பட்டது.இந்நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர்கள் பிரகாஷ் மற்றும் நவீன்குமார், முன்னாள் ஒன்றிய செயலாளர் கண்ணன், கோவிந்தராஜ், கோவிந்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் ஆண்கள் பெண்கள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முருகேசன், முனியன், ராஜா, முனியப்பன் ஆகியோர் செய்திருந்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!