Home » கிருஷ்ணகிரி அருகே உள்ள கந்திகுப்பம் அருகே பல்நோக்கு கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்காக டாக்டர் செல்வகுமார் எம்பி திறந்து வைத்தார்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கந்திகுப்பம் அருகே பல்நோக்கு கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்காக டாக்டர் செல்வகுமார் எம்பி திறந்து வைத்தார்.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி அருகே உள்ள கந்திகுப்பம் கிராமத்தில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்காக காங்கிரஸ் உறுப்பினர் டாக்டர் செல்வகுமார் திறந்து வைத்தார்.கிருஷ்ணகிரி அருகே உள்ள கந்திகுப்பம் ஸ்ரீ காலப்பைரவர் திருக்கோவில் அருகில் மக்கள் பயன்படும் வகையில் பல்நோக்கு கட்டிடம் கட்டப்படவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.செங்கொடி நகர், கந்திகுப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் 19 லட்சம் மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தின் திறப்பு விழா நடைப்பெற்றது.கந்திகுப்பம் ஸ்ரீ காலப்பைரவர் சுவாமிகளின் தலையில் நடைப்பெற்றது,இந்த விழாவில் கலந்துக்கொண்ட காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார் புதியதாக கட்டிமுடிக்கப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடத்தினை மக்கள் பயன்பாட்டுக்கு குத்து விளக்கு ஏற்றி திறந்துவைத்தார்.அப்போது மக்களின் நீண்டநாள் கோரிக்கை நிறைவேற்றி வைத்ததிற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.மேலும் இந்த விழாவின்போது காங்கிரஸ் கட்சியின் முன்னால் மாவட்டத்தலைவர் காசிலிங்கம், மாநிலப் பேச்சாளர் நாஞ்சில் ஜேசு, மாவட்டத் துணைத்தலைவர் சேகர், நகர தலைவர் யுவராஜ், இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் விக்னேஷ் பாபு, சேவாதள காங்கிரஸ் கட்சியின் மாவட்த் தலைவர் தேவராஜ், ஆடிட்டர் வடிவேல்,பர்கூர் பேருராட்சி தலைவர் சந்தேஷ்குமார்,வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்கள்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!