Home » இரத்ததானம் அளித்த மை தருமபுரி குடும்பத்தினர் – இதுவரை 5947 யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கி சாதனை.

இரத்ததானம் அளித்த மை தருமபுரி குடும்பத்தினர் – இதுவரை 5947 யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கி சாதனை.

by Poovizhi R
0 comment

இரத்ததானம் அளித்த மை தருமபுரி குடும்பத்தினர்மை தருமபுரி அமைப்பின் சார்பாக பல சேவைகளை தருமபுரி மக்களின் ஆதரவோடு ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர். தங்களால் முடிந்த அவசர ரத்ததான தேவைகளை தருமபுரி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை நோயாளிகளுக்கு அரசு குருதி வங்கி, மாருதி இரத்த வங்கி மூலம் குருதி கொடையாளர்களை கொண்டு கொடை அளித்து வருகின்றனர். நோயாளிகளின் உறவினர்களையும் இரத்ததானம் அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தருமபுரி தனியார் மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சைக்காக இரத்தம் தேவைப்பட்ட உடன் மை தருமபுரி குடும்பத்தினர் சமூக சேவகர் தமிழ்செல்வன், சார்லஸ் ஆகியோர் இரத்ததானம் கொடை அளித்தனர். இதுவரை மை தருமபுரி அமைப்பின் மூலம் அவசர ரத்ததான தேவை, முகாம் என 5947 யூனிட் இரத்தம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். இரத்ததானம் அளிப்போம் பிறர் உயிரைக் காப்போம்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!