Home » தருமபுரி பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறை சார்பாக கருத்தரங்கு நடைபெற்றது.

தருமபுரி பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறை சார்பாக கருத்தரங்கு நடைபெற்றது.

by Poovizhi R
0 comment

தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கில துறையின் சார்பாக ‘தகவல் பரிமாற்றத்தில் ஏற்படக்கூடிய தடைகளை தகர்வது எப்படி’ என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. இதில் மதுரை சௌராஷ்டிரா கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் முனைவர் கணேசன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். இவர் தனது உரையில் ஆங்கில உரையாடலின் போது ஏற்படக்கூடிய தடுமாற்றம், தக்க சூழ்நிலைக்கு ஏற்றவாறு சரியான சொற்களை பயன்படுத்துதல், இலக்கணப் பிழை தவிர்த்தல் போன்றவற்றைப் பற்றி மிக எளிமையாக எடுத்துரைத்தார். தொடர்ந்து பல்வேறு வார்த்தை விளையாட்டுகள் மூலம் தகவல் தொடர்பு மேம்படுத்தும் முறைகள் பற்றியும் எடுத்துரைத்தார். முன்னதாக ஆராய்ச்சி மைய இயக்குனர் முனைவர் மோகனசுந்தரம் அவர்கள் தலைமை உரையாற்றினார். ஆங்கிலத் துறை தலைவரும் நிகழ்வு ஒருங்கிணைப்பாளருமான பேரா. முனைவர் சி.கோவிந்தராஜ் அவர்கள் துவக்க உரையாற்றினார். முனைவர் கிருத்திகா வாழ்த்துரை வழங்கினார். ஆய்வில் நிறைஞர் செல்வி ஷாலினி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். முதலாம் ஆண்டு மாணவி ஜனனி வரவேற்க, இறுதியாக நிவேதிதா நன்றி உரை வழங்கினார். நிகழ்வை ஆய்வியியல் நிறைஞர் சுபநந்தினி தொகுத்து வழங்கினார்.‌ நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பெருமாள், பழனிச்சாமி, ஹரி கிருஷ்ணன், மற்றும் தாமரைச்செல்வன் ஆகியோர் செய்து இருந்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!