Home » அறிஞர் அண்ணா கல்லூரியில் அறிவுசார் காப்புரிமை இணைய வழி கருத்தரங்கம்.

அறிஞர் அண்ணா கல்லூரியில் அறிவுசார் காப்புரிமை இணைய வழி கருத்தரங்கம்.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவுசாரர் காப்புரிமை தினத்தை முன்னிட்டு புதன்கிழமை அன்று இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.அறிவுசார் காப்புரிமை மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆ. தேவா அவர்கள் வரவேற்றார்.கல்லூரியின்முதல்வர் முனைவர் சு . தனபால் அவர்கள் தலைமை தாங்கினார்.தன்னுடைய தலைமை உரையில் இலக்கிய படைப்பாற்றல்,இசை,ஒளிப்பதிவு பான்ற அசலாக படைப்புகளை பாதுகாக்கும் வண்ணம் சட்டத்தின் அடிப்படையில் ஏற்படுத்த தனிப்பட்ட உரிமை பதிப்புரிமை என்று பேசினார். சிறப்பு விருந்தினராக இந்திய அரசாங்க காப்புரிமை மற்றும் வடிவமைப்புகளை பரிசோதிப்பவர் சென்னையைச் சேர்ந்த திரு A. சீதாராமன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தன்னுடைய சிறப்புரையில் தனிநபர் காப்புரிமை,உயிரியல்காப்பரிமை,வணிகக் காப்புரிமை,இரசாயனகாப்புரிமை,மென்பொருள் காப்புரிமை குறித்து பேசினார்.முந்நூறுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கண்டு சிறப்பித்தார். கருத்தரங்கின்நிறைவாக தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ப. சுரேஷ்குமார் நன்றியுரை கூறினார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!