Home » பர்கூர் ஒன்றியத்தில் 16லட்சம் மதிப்பீட்டில் திட்ட வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை டாக்டர் மு.தம்பிதுரை துவக்கி வைத்தார்.

பர்கூர் ஒன்றியத்தில் 16லட்சம் மதிப்பீட்டில் திட்ட வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை டாக்டர் மு.தம்பிதுரை துவக்கி வைத்தார்.

by Poovizhi R
0 comment

கிருஷ்ணகிரி,ஏப்.30- கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் பெருகோப்பனப்பள்ளி கிராமத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர். மு.தம்பிதுரை மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 9 இலட்சம் மதிப்பீட்டில் நாடக மேடை அமைக்கவும், சந்தூர் கிராமத்தில் பல்நோக்கு கட்டிடம் கட்ட ரூ. 7 இலட்சம் மதிப்பீட்டிலும் திட்ட வளர்ச்சி பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினர் டாக்டர். மு. தம்பிதுரை கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார்.மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ண ரெட்டி, பர்கூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.வி. ராஜேந்திரன், ஒன்றிய கழக செயலாளர் ஜெயபால், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தூய மணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் எஸ்.எம். மாதையன், கூட்டுறவு சங்க தலைவர் செட்டி குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைத் தலைவர் சதாசிவம், ஒன்றிய அவைத்தலைவர் மாதப்பன், சந்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமார், வெள்ளையன், வலசை கவுண்டனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சக்கரவர்த்தி, கூட்டுறவு சங்க தலைவர் மாதையன், கெங்காவரம் மாதையன் உள்பட ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!