Home » பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக ஆட்சியின் ஊழலை கொண்டுவருவோம் என கூறியதாக எனக்கு தெரியவில்லை – மு.தம்பிதுரை எம்பி.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக ஆட்சியின் ஊழலை கொண்டுவருவோம் என கூறியதாக எனக்கு தெரியவில்லை – மு.தம்பிதுரை எம்பி.

by Poovizhi R
0 comment

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக ஆட்சியின் ஊழலை கொண்டுவருவோம் என கூறியதாக எனக்கு தெரியவில்லை – சந்தூரில் நடைபெற்ற பூமி பூஜை விழாவில் தம்பிதுரை பேட்டிநாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பெருகோப்பணப்பள்ளி நடுநிலைப்பள்ளியில் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாடக மேடை அமைக்கவும், அதேபோல் சந்தூர் கிராமத்தில் 7 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை அமைக்கவும் பூமி பூஜை போடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி வி ராஜேந்திரன், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஜெயபாலன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தூயமணி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் எஸ்.எம். மாதையன், கூட்டுறவு சங்க தலைவர் செட்டிகுமார், சந்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமார், வெள்ளையன், வலசை கவுண்டனூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சக்கரவர்த்தி, கூட்டுறவு சங்க தலைவர் மாதையன், கெங்காவரம் மாதையன் உள்பட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை செய்தியாளர் சந்திப்பில் பேசியதாவது : பிடிஆர் பழனிவேல்ராஜன் ஆடியோவில் குறிப்பிட்டுள்ளது போல் 30,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. ஊழலுக்கு வித்திடுகின்ற வழியை இந்த ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.திமுக ஆட்சி என்றாலே அராஜக ஆட்சி.இந்த ஆட்சியில் மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை.சட்டம் ஒழங்கு இந்த ஆட்சியில் சீரழிந்துள்ளது.இளைஞர்கள் மத்தியில் வெறுப்பு உருவாகியுள்ளது.திராவிட அரசியலின் குறிக்கோள் குடும்ப அரசியல் இல்லாமல் இருப்பது. அதற்கு நேர்மாராக திமுக உள்ளது.பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுக ஆட்சியின் ஊழலை கொண்டுவருவோம் என கூறியதாக எனக்கு தெரியவில்லை.அதிமுகவின் குறிக்கோளும் ஊழலை ஒழிப்பது தான்.வருகின்ற நாடாளுமன்ற தொகுதியில் கூட்டணி கட்சிகள் சீட் கேட்பது அவர்களது உரிமை. ஆனால் சீட் கொடுப்பது நாங்கள் தான்.பாஜக கட்சிக்காரர்கள் அதிமுகவை விமர்சிப்பது குறித்து பாரத பிரதமருடன் பேசும்போது, கட்சிகாரர்கள் அரசியலுக்காக பேசுவார்கள், அதை பெரியதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நமக்கு கூட்டணி தான் முக்கியம் என குறிப்பிட்டார்.கர்நாடகத்தில் தமிழ்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதற்கு அதிமுக சார்பில் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு பேசினார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!