Home » ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் தினம் முன்னிட்டு காக்கும் கருணை கரங்கள் விருது வழங்கும் நிகழ்ச்சி

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் தினம் முன்னிட்டு காக்கும் கருணை கரங்கள் விருது வழங்கும் நிகழ்ச்சி

by Poovizhi R
0 comment

ஊத்தங்கரை-12 கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உலக செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு செவிலியர்களுக்கு காக்கும் கருணைக்கரங்கள் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு பொறுப்பு மருத்துவ அலுவலர் ப.மதன்குமார் தலைமை தாங்கினார். டிஎஸ்பி எ.அமல அட்வின், ஆர்கே ஹோட்டல் எம்.ராஜா, கல்வியாளர் செ.மாலதி, சைக்காலஜிஸ்ட் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பணியாற்றுகின்ற செவிலியர்களுக்கு ரெட் கிராஸ் ஊத்தங்கரை கிளை தலைவர் வி.தேவராசு, அலினா சில்க்ஸ் எஸ்.எ.பாபு அப்துல் சையத், கிரேட் என்ஜிஓ சி.உமாமகேஸ்வரி ஆகியோர் காக்கும் கருணை கரங்கள் விருது வழங்கினார்கள். செவிலியர்கள் சாந்தி, ஜெயந்தி, நித்யா, கௌரி, சாமுண்டீஸ்வரி, தனலட்சுமி, வரலட்சுமி, அலமேலு, சுஜாதா, விஜயா, சித்ரா, அமுதவள்ளி, யோகலட்சுமி, ஷகிலா, வளர்மதி, கனிமொழி, பவ்யா, அரவிந்த கொடி, அஸ்வினி, உண்ணாமலை, கவிதா, சத்தியவாணி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!