Home » வேளாண்மை இயந்திர மயமாக்கல் மானியத் திட்டங்களில் பயன்பெற கிருஷ்ணகிரி வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அழைப்பு

வேளாண்மை இயந்திர மயமாக்கல் மானியத் திட்டங்களில் பயன்பெற கிருஷ்ணகிரி வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அழைப்பு

by Poovizhi R
0 comment

வேளாண்மை இயந்திர மயமாக்கல் மானியத் திட்டங்களில் பயன்பெற கிருஷ்ணகிரி வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அழைப்புகிருஷ்ணகிரி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள கிராமங்களில், வேளாண்மை உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல்துறை, மூலம் வேளாண்மை இயந்திர மயமாக்குதலில் மானிய திட்டங்கள் மூலம் பயன்பெற வேண்டும் கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திரு.வெ.சுரேஷ்குமார் அவர்கள் தெரிவித்ததாவது,1. பண்ணைக் குட்டை அமைத்து நிலத்தடி நீர் சேமித்திட உதவிடும் வகையில் ரூ.1,40,000/- அனைத்து விவசாயிகளுக்கும் 100% மானியத்தில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செய்து தரப்படும்.2. அறுவடை இயந்திரம் ( 14 அடி) – மானியம் 50% அல்லது ரூ.8,00,000/- இவற்றில் எது குறைவோ அத்தொகை.3. விதையுடன் உரமிடும் கருவி (11 கொத்து) மானியம் 50% அல்லது ரூ.24,100/- இவற்றில் எது குறைவோ அத்தொகை.4. தென்னை ஒலை துகளாக்கும் கருவி மானியம் 50% அல்லது ரூ.63,000/- இவற்றில் எது குறைவோ அத்தொகை. 5. களையெடுக்கும் கருவி (2 குதிரைத் திறனுக்குக் கீழ்) மானியம் 50% அல்லதுரூ.25,000/- இவற்றில் எது குறைவோ அத்தொகை.6. கொத்துக்கலப்பை மானியம் 50% அல்லது ரூ.50000/- இவற்றில் குறைவான தொகை, ஆதிதிராவிடர், மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு சிறப்பினமாக 1 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நிலமுடைய பாசன வசதி இல்லாதவர்களுக்கு 100% மானியத்தில் கிணறுகள் அல்லது போர்வெல் அமைத்திடல் போன்ற மானிய திட்டங்களில் பயன்பெற விவசாயிகளை கேட்டுகொண்டார்.கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் 2023-24 வருடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் கீழ்கண்ட அலுவலர்களை அணுகி பயன்பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகிறதுஎந்த கிராம விவசாயிகள் யாரை தொடர்பு கொள்வது?இட்டிகல் அகரம் கிராம பஞ்சாயத்தை சார்ந்த விவசாயிகள் திரு மா.முத்துசாமி, உதவி வேளாண்மை அலுவலர் அவர்களை 9443363925 எண்ணிலும், பெத்தனப்பள்ளி,கம்பம்பள்ளி கிராம பஞ்சாயத்தை சார்ந்த விவசாயிகள் திரு.வி.விஜயன்.உதவி வேளாண்மை அலுவலர், அவர்களை 8838343514 எண்ணிலும் பெல்லாரம்பள்ளி கிராம பஞ்சாயத்தை சார்ந்த விவசாயிகள் திரு. R.சிவராஜ்.உதவி வேளாண்மை அலுவலர் அவர்களை 8248888751 எண்ணிலும், பெல்லம்பள்ளி கிராம பஞ்சாயத்தை சார்ந்த விவசாயிகள் திரு. S. முனிராஜி உதவி வேளாண்மை அலுவலர் அவர்களை 8344371443 எண்ணிலும் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொண்டார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!