Home » தருமபுரி மாவட்டம் தொப்பூர் மலைப்பகுதி சாலையை விபத்தில்லாத சாலையாக அமைக்க வேண்டுமென துறை சார்ந்த அதிகாரியிடம் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ மனு

தருமபுரி மாவட்டம் தொப்பூர் மலைப்பகுதி சாலையை விபத்தில்லாத சாலையாக அமைக்க வேண்டுமென துறை சார்ந்த அதிகாரியிடம் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ மனு

by Poovizhi R
0 comment

தருமபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் மலைப்பகுதி சாலை வளைவு மிகுந்த சாலையாகும். இச்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. விபத்துக்களால் அதிக அளவில் உயிரிழப்புகளும், பலத்த காயங்களும், உடல் உறுப்புகளும் இழக்கின்ற சூழ்நிலை உருவாகின்றன. நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனம் இயக்குபவர்களும், பொதுமக்களும் மிகுந்த அச்சத்துடன் சாலையை கடந்து பயணம் செய்கின்றனர். விபத்து ஏற்பட்டால் பல கிலோமீட்டர் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன சூழல் ஏற்படுகிறது. துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் விபத்துக்கள் குறையவில்லை. தொப்பூர் மலைப்பகுதி சாலையை ஆய்வு செய்து, விபத்தில்லாத சாலையாக உடனடியாக அமைக்க வேண்டுமென திட்ட இயக்குனர் இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரியை சந்தித்து மனுக்கள் வழங்கப்பட்டது எஸ்.பி.வெங்கடேஷ்வரன் சட்டமன்ற உறுப்பினர் தருமபுரி அவர்கள் உடன் சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் அவர்களுடன் வன்னியர் சங்க மேற்கு மாவட்ட செயலாளர் தர்மபுரி இ.மா. பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!