Home » தளி வட்டார ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மானியம் பெற அழைப்பு

தளி வட்டார ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மானியம் பெற அழைப்பு

by Poovizhi R
0 comment

தளி வட்டார ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மானியம் பெற அழைப்புதனி வட்டாரத்தில் வேளாண்மை – உழவர்நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு 20 கிராம பஞ்சாயத்துகளில் நடைமுறையில் உள்ளது. இது குறித்து தளி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திரு.சி.முருகன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2022-23 மற்றும் 2023-24 வருடத்தில் 20 கிராம பஞ்சாயத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி தரிசு நிலங்களை சாகுபடிக்கேற்ற தரிசு நிலங்களாக மாற்றி சாகுபடி பரப்பினை அதிகரிக்கவும், வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பவர் டில்லர் சிறு, குறு, ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50சதவீதம் அல்லது ரூ.85000/- மற்றும் இதர விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது ரூ.70000/- வழங்கப்படுகிறது மற்றும் பண்ணைக்குட்டை அமைக்க 100 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. மேலும் தனிப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு 1 ஏக்கர் முதல் 5 ஏக்கர் வரை நிலமுடைய விவசாயிகள் கிணறுகள்அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு திரு.பெ.கண்ணன்தசரூபன், (உதவி வேளாண்மை அலுவலர், தொட்டஉப்பனூர்,தளி – 9443718250) திரு.மு.அரிகுமார், (உதவி வேளாண்மை அலுவலர், கொடியாளம், சாரகப்பள்ளி – 9865708173 ) திரு.எ.விக்கிரமாதித்தன், (உதவி வேளாண்மை அலுவலர், பள்ளப்பள்ளி, மதகொண்டப்பள்ளி – 9698777080) திரு.கு.கோவிந்தராஜன், (உதவி) வேளாண்மை அலுவலர், அந்தேவனப்பள்ளி, மருதானப்பள்ளி – 7806896640) திரு.கா.ஜெயம், (உதவி வேளாண்மை அலுவலர், தக்கட்டி, நொகனூர் – 6381727249) திரு.முரளி, (உதவி தோட்டக்கலை அலுவலர், தேவருளிமங்கலம், குந்துக்கோட்டை – 9677850757) திரு.செந்தில்குமார், (உதவி தோட்டக்கலை அலுவலர், பேளகொண்டப்பள்ளி, கொமரானப்பள்ளி- 8668156757) திரு.ஸ்ரீதர், (உதவி தோட்டக்கலை அலுவலர், ஜாகிர்கோடிப்பள்ளி, சாத்தனூர் 8098981209) திரு.சரவணன், (உதவி தோட்டக்கலை அலுவலர், செட்டிப்பள்ளி, தாரவேந்திரம் – 9489479904) திரு.சத்யமூர்த்தி, (உதவி வேளாண்மை அலுவலர்,கலுகொண்டப்பள்ளி, கெம்பட்டி – 9976587675)தேவைப்படும் விவசாயிகள் தங்களது நில உடமை ஆவணம், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன் பெறவும். மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகவும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!