Home » தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கழிவறை அமைக்க பூமி பூஜை.

தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் கழிவறை அமைக்க பூமி பூஜை.

by Poovizhi R
0 comment

தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் 380 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் இப்பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். இப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு போதுமான கழிப்பறை வசதியின்றி அவதியுற்று வந்துள்ளனர். தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து ரூபாய் 8.00 இலட்சம் மதிப்பீட்டில் நிதியை உடனடியாக ஒதுக்கி அதிநவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையை அமைத்து தருவதாக உறுதியளித்தார். பள்ளியில் தற்போது கழிவறை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை செய்து, அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். பின்னர், மாணவிகளிடம் பேசிய அவர், பெண்களின் கல்வி வளர்ச்சி மேலோங்க அனைத்து வசதிகளையும் பள்ளியில் ஏற்படுத்த வேண்டும். பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு கழிப்பறை வசதி மிகவும் தேவையான ஒன்று. கழிப்பறை பெண் கல்வியின் வளர்ச்சிக்கான பாதையை வழிவக்குகிறது என்றார் இந்நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சுமதி, இளநிலைப் பொறியாளர் பாலாமணி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் கிருஷ்ணம்மாள், அரசு விடுதி தேர்வு குழு உறுப்பினர் இ.மா.பாலகிருஷ்ணன், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிக்குமார், பெருமாள், பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!