Home » காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் +2 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

by Poovizhi R
0 comment

சாதனை படைத்த மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் பாராட்டு காவேரிப்பட்டணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் வேந்தன் தலைமை தாங்கினார் உதவி தலைமை ஆசிரியர் பவுன்ராஜ் கணித ஆசிரியர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு விருந்தினராக பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜே கே எஸ் பாபு கலந்து கொண்டு அதிக மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்த மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கேடயங்களை வழங்கினார் மாணவர் ஷேக் நிஜாமுதீன் 536 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார் ஜெயசந்தாஎன்ற மாணவர் 529 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடம் பெற்றார் மேலும் இம்மானவர் அரசியல் அறிவியல் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார் பள்ளியின் எண்பது ஆண்டு கால வரலாற்றில் இவ்வாறு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுவது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது மாணவர் ஹரிஷ் குமார் 507மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடம் பெற்றார் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவர்களையும் அவர்களை உருவாக்கிய ஆசிரியர்களையும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாராட்டினார் இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் இளங்கோ துரை நாகராஜ் பசுபதி ஹரி நாராயணன் மற்றும் ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்

You may also like

Leave a Comment

error: Content is protected !!