Home » ஓசூர் அருகே எஸ்.முதுகானப்பள்ளி கரகம்மா கோவில் திருவிழா22 ஆண்டுக்கு பின்பு நடந்தது

ஓசூர் அருகே எஸ்.முதுகானப்பள்ளி கரகம்மா கோவில் திருவிழா22 ஆண்டுக்கு பின்பு நடந்தது

by Poovizhi R
0 comment

கரகம்மா கோவில் திருவிழா22 ஆண்டுக்கு பின்பு நடந்ததுஓசூர் அருகே எஸ்.முதுகானபள்ளி கிராமத்தில் பழமையான கரகம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுவாமிக்கு பூஜை செய்து அதன் பின்பு மண்பானையில் பூ, வெற்றிலை போன்றவற்றை வைத்து பூமிக்கடியில் கோவில் நிர்வாகம் புதைத்து வைப்பது வழக்கம். அதன் பின்பு மீண்டும் திருவிழா நடக்கும் போது அதை எடுத்து பார்த்தால் பூக்கள், வெற்றிலை போன்றவை எதுவுமே கெட்டு போயிருக்காது. இக்கோவிலின் திருவிழா 22 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று நடந்தது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 200 க்கும் மேற்பட்ட கிடாக்கள் பலி கொடுக்கப்பட்டு பக்தர்களுக்கு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. அசைவ விருந்தில் கலி, மட்டன், சிக்கன், பிரியாணி போன்ற உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த திருவிழாவில் பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!