Home » தமிழ்நாடு மருத்துவ துறை பொதுப்பணி அலுவலர் சங்கத்தின் செய்தி

தமிழ்நாடு மருத்துவ துறை பொதுப்பணி அலுவலர் சங்கத்தின் செய்தி

by Poovizhi R
0 comment

2022-23 ஆம் ஆண்டின் நிர்வாக அலுவலர் பதவி உயர்வு கோப்பு அரசின் நடவடிக்கையில் உள்ள நிலையில் ஏற்கனவே நம்முடைய மாநில பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணி மற்றும் மாநில துணைத்தலைவர் திரு சந்திரசேகரன் அவர்களும் அரசு மற்றும் இயக்கக அலுவலர்களிடம் கலந்து விரைவான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பதவி உயர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ள நம்முடைய சகோதரர் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்களும், சகோதரி திருமதி.சாந்தி அவர்களும் எதிர்வரும் 31 -05 – 2023 அன்று ஓய்வு பெற உள்ள நிலையில் அவர்களுக்கும் இந்த நிர்வாக அலுவலர் பதவியை பெற்று தரவேண்டும் என்ற நோக்கத்தோடு, நம்முடைய சங்கத்தின் மாநிலத் தலைவர் மரியாதைக்குரிய ச. பொன்னுசாமி அவர்களின் தலைமையில், பொதுச் செயலாளர் இரா.பாலசுப்பிரமணி, பொருளாளர் , திரு எஸ்.கே. சரவணன் அவர்களும், துணைத் தலைவர் சந்திரசேகரன், மாநில நிர்வாகிகள் திரு.அருண் பிரசாத், திருமதி. யமுனாதேவி, பதவி உயர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ள உள்ள சகோதரர் திரு கோபாலகிருஷ்ணன் மற்றும் சகோதரி திருமதி.சாந்தி அவர்களும், ஓய்வு பெற்ற நிர்வாக அலுவலர் திருமதி மலர்விழி ஆகியோர்கள் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களையும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் அவர்களையும் சந்தித்து நம்முடைய கோரிக்கையான நிர்வாக அலுவலர் பதிவு உயர்வை மே – 2023 உள்ளாகவே வெளியிட்டு பணி ஓய்வு பெற உள்ள இளநிலை நிர்வாக அலுவலர்களுக்கு ஒரு நல் வாய்ப்பு வழங்குமாறு நம்முடைய சங்கத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது. 🍫*அந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் அவர்களும் உடனடி நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்னும் செய்தியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.* 🍫அதற்கான பணிகளும் தலைமைச் செயலக அலுவலர்களும் விரைவான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனவே நிச்சயமாக மே -2023 மாதத்திற்கு உள்ளாகவே நிர்வாக அலுவலர் பதவி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை செய்தியை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.🍫இப்படை தோற்கின் எப்படை வெல்லும் . உங்களின் ஒருமித்த ஆதரவுடன்🤝🤝இது ஒரு கூட்டு முயற்சி

You may also like

Leave a Comment

error: Content is protected !!