பெங்களூரில் இன்று நடைபெற உள்ள புதிய காங்கிரஸ் ஆட்சி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று இரவு பெங்களூர் வந்தடைந்தார். அவரை கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர்கள் தே.மதியழகன் எம்எல்ஏ, ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். முன்னாள் வேப்பனப்பள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.முருகன் உடனிருந்தார்.