Home » ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயிலும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயிலும் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

by Poovizhi R
0 comment

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயிலும் 10, 11 மற்றும் 12 -ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான “விழுதுகளை வேர்களாக்க” என்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.05.2023) துவக்கி வைத்தார்.கல்வி பயிலும் வயதில் மாணவ, மாணவிகள் தங்களுக்கு பிடித்த பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியாக கல்வி கற்று எதிர்கால சமுதாயத்தை நல்ல முறையில் உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தகவல்.கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் மறுமலர்ச்சி தடம் மற்றும் தமிழக அரசு ஆதிதிராவிடர் நலத்துறை இயக்கநரகத்துடன் இணைந்து நடத்தும் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயிலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான “விழுதுகளை வேர்களாக்க” என்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.05.2023) துவக்கி வைத்தார்.மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில், நான் முதல்வன் திட்டம், அரசு பள்ளி அரசு மாணவர்களுக்கு தொழில் கல்வியில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அதனடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நடத்தப்படும் 24 விடுதிகளில் தங்கி பயிலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி பயில்வதற்கான வழிமுறைகள் குறித்து உயர்கல்வி வழிகாட்டல் – 2023 -ன் கீழ் ஆலோசனை வழங்கப்படுகிறது.அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடித்த மாணவர்களில் குறைவான மாணவர்களே உயர்கல்விக்கு செல்கின்றனர். நன்றாக படித்த, தனித்திறமைகள் உள்ள பல மாணவர்கள் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் உயர்கல்வியை தொடர முடியாத நிலையில் உள்ளனர். அத்தகைய மாணவர்களுக்கு வழிகாட்டிடும் வகையிலும், உயர் கல்வி பயிலும் மாணவர்களின் சதவிகிதத்தை அதிகப்படுத்தும் நோக்கிலும் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவ, மாணவிகளின் எதிர்கால சமுதாயத்தை உருவாக்க முடியும்.இந்நிகழ்ச்சி மூலம் மாணவர்கள் என்னென்ன படிப்புகள் உள்ளன, அந்த படிப்புகளை படித்த பின் என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதை அறிந்துகொள்ள முடியும். மாணவ, மாணவிகள் தங்களுக்கு பிடித்த கல்வியை கற்க வேண்டும். மாணவர்கள் நன்றாக படித்து நுழைவுத்தேர்வு எழுதி வேலை வாய்ப்பு பெற வேண்டும். முதல் முயற்சி தோல்வி அடைந்தாலும் கவலைப்படாமல், தொடர்ந்து முயற்சி செய்து வெற்றி பெற வேண்டும்.இந்த காலகட்டத்தில் வேலைவாய்ப்பு பெறுவது என்பது கடுமையாக உள்ளதால் மாணவ, மாணவிகள் உயர்கல்விக்கான திட்டங்களை அறிந்து கொண்டு தங்களுக்கான தனித்திறமைகளை கண்டறிந்து அதற்கான படிப்புகளை பயில வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.எஸ்.கே.கனகராஜ், ஒருங்கிணைப்பாளர் (மக்கள் மறுமலர்ச்சி தடம்) மரு.சங்கர், கல்வி ஆலோசகர்கள் திருமதி.அமுதவள்ளி, திரு.இளையராஜா, தனி வட்டாட்சியர் (ஆதிதிராவிடர் நலத்துறை) திரு.கோவிந்தராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!