Home » கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள அரசு விளையாட்டு மைதானத்தில் யூத் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் பேரொளி சிலம்பம் இணைந்து நடத்திய கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள அரசு விளையாட்டு மைதானத்தில் யூத் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் பேரொளி சிலம்பம் இணைந்து நடத்திய கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்

by Poovizhi R
0 comment

கோடைக்கால சிறப்பு விளையாட்டு முகாம் நிறைவு விழாகிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள அரசு விளையாட்டு மைதானத்தில் யூத் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் பேரொளி சிலம்பம் இணைந்து நடத்திய கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது.கடந்த 10.05.2023 முதல் 24.05.2023 வரை நடைபெற்ற கோடைகால விளையாட்டு பயிற்சி முகாமில் கூடைப்பந்து, சிலம்பம் மற்றும் கால்பந்து போன்ற விளையாட்டுகள் முறையாக பயிற்றுவிக்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமில் அளிக்கப்பட்ட பயிற்சிகள் குறைந்தது 6 மாத கால பயிற்சி முறைகளை காலை 2 மணி நேரமும், மாலை 2 மணி நேரமும் இந்த 15 நாட்கள் மாணவர்களுக்கு அனுபவமிக்க பயிற்சியாளர்களை கொண்டு சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்டது. ஒவ்வொரு மாணவர்களும் பயிற்சிகளை சிறப்பாகவும் முறையாகவும் கற்றுக்கொண்டனர். எதிர்வரும் நாட்களில் அரசு சார்பில் ஏதேனும் போட்டிகள் நடைபெற்றால் அதில் பங்குபெறும் அளவிற்கு சில மாணவர்கள் சிறப்பாக ஈடுபாட்டுடன் பயின்றனர். மேலும் இந்த பயற்சிகளை இத்துடன் நிறுத்திவிடாமல் தொடர்ந்து பயிற்சி எடுக்கவும், விளையாட்டுகள் முறையாக கற்றுக்கொள்வதினால் அவர்களின் எதிர்காலத்திற்கு என்ன பயன் என்றும் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. 6 மாத கால பயிற்சியை இந்த குறுகிய காலத்தில் இத்தனை சிறப்புடனும், கடுமையான உழைப்புடன் கற்றுதேர்ந்த மாணவ, மாணவிகளை பாராட்டும் வகையில் அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் சான்றிதழ் அளிக்கும் விழா நடைபெற்றது. மாணவர்களை மேலும் ஊக்குவிக்க கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இவர்களுக்கு சான்றிதழ் வழங்கியது இதில் மேலும் சிறப்பு.நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக கெரிகேப்பள்ளி தலைமையாசிரியர் வீரமணி, செ.நாச்சிப்பட்டு தலைமையாசிரியர் சேகர், இணை இயக்குநர் (ஓய்வு) குப்புசாமி, ஸ்டேட் வங்கி மேலாளர் ராஜகுமாரன், முன்னாள் மாநில கபடி வீரர் கண்ணன், விளையாட்டு மைதான பொறுப்பாளர் அந்தோணி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை கூடைபந்து பயிற்சியாளரும் தீயணைப்பு வீரருமான முனுசாமி அவர்கள் வரவேற்புரை வழங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் எம்.எஸ்.எம். அகாடமி சுரேஷ், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். விழாவில் சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில் விளையாட்டு பயிற்சி எடுத்துக்கொண்டால் மேற்படிப்பு, வேலைவாய்ப்பு போன்றவற்றையின் முன்னுரிமை குறித்து பேசினர். மேலும் சென்ற ஆண்டு முதல் கூடைப்பந்து பயிற்சி எடுத்துவரும் செந்தில், அஜய், ஹர்ஜீத் ஆகியோர்கள் அந்த பயிற்சியினால் இந்த ஆண்டு விளையாட்டு பள்ளியில் படிக்க இடம்பெற்றுள்ளனர். அவர்களை அனைவரும் பாராட்டினார். மேலும் கபடி பயிற்சி அளித்து காவல்துறை பணியில் சேர இருக்கும் அஜித் அவர்களுக்கு பாராட்டு செய்யப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியாக 60 மாணவ-மாணவிகளுக்கும், மேலும் எம்.எஸ்.எம். அகாடமி கபடி மாணவர்களுக்கும் பதக்கங்கள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாபமாக சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. சிலம்பம் ஆசிரியர் சதாசிவம் பயிற்சி முகாமில் பயிற்சிபெற்ற மாணவர்களை கொண்டு சிறப்பான சிலம்ப நிகழ்ச்சியினை நிகழ்த்தி காட்டினார்கள். சிலம்பம் பயிற்சியாளரும் தீயணைப்பு வீரருமான முனுசாமி, நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை யூத் ஸ்போர்ட்ஸ் அகாடமி உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!